ARTICLE AD BOX
ஆந்திராவில் ஒரு பள்ளியில் நடந்த ஒரு விஷயம்தான் தற்போது அதிகம் பேசப்பாட்டு வருகிறது. அதாவது மாணவர்கள் தங்களது அறிவால், தலைமை ஆசிரியரையே தோப்புக்கரணம் போடவைத்துள்ளனர்.
எப்போதும் மாணவர்கள் தவறு செய்வார்கள் அல்லது சேட்டை செய்வார்கள். அதனை ஆசிரியர்கள் கண்டிப்பார்கள். சில நேரம் ஆசிரியர்கள் தங்களது வேறு கோவத்தையெல்லாம் மாணவர்கள் மீது காண்பித்து மன அமைதி அடைவார்கள். இதனால், மாணவர்கள் நம்மை ஏன் திட்டுகிறார்கள் என்று கூட தெரியாமல், முழித்துக்கொண்டிருப்பார்கள்.
சில சமயம் மாணவர்கள் நாம் ஆசிரியர்களாகவும், ஆசிரியர்கள் மாணவர்களாக இருந்தால், எப்படி இருக்கும் என்று கற்பனையெல்லாம் செய்வார்கள்.
ஆனால், இங்கு கற்பனையெல்லாம் இல்லை. உண்மை.
ஆந்திரா மாநிலத்தில் விசாகபட்டினம் மாவட்டத்தில் ஜில்லா பரிஷத் உயர்நிலை பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளியில் ஒரு கூட்டம் நடைபெற்றிருக்கிறது. அந்த கூட்டத்தில் ஒரு பரபரப்பான விவாதம் நடைபெற்றிருக்கிறது. அதாவது மாணவர்களின் கல்வித் திறன் மேம்படாததற்கு காரணம் ஆசிரியர்களா? அல்லது மாணவர்களா? என்று தலைமை ஆசிரியர் கேள்வி எழுப்பினார்.
இந்த விவாதத்தில் ஆசிரியர்கள் பக்கம் தவறு ஏற்பட்டால், நான் தரையில் விழுந்து மன்னிப்பு கேட்பேன் என்றும், காதுகளை பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடுவேன் என்றும் தலைமை ஆசிரியர் கூறினார்.
அதில் மாணவர்களே வெற்றிபெற்றனர். ஆசிரியர்கள் மீதுதான் தவறு என்ற கூற்று வந்தது. இதனால், அந்த தலைமை ஆசிரியர் தரையில் விழுந்து மன்னிப்பு கேட்டதுடன் தோப்புக்கரணம் போட்டார். கிட்டத்தட்ட 50 முறைகள் தோப்புக்கரணம் செய்தார். மாணவர்கள்,” சார் வேணாம்… அப்படி செய்யாதீர்கள்” என்று எத்தனையோ முறை எடுத்துக் கூறியும் அவர் கேட்கவே இல்லை.
இதற்கு பலரும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அரசு மற்றும் கல்வி வட்டாரங்களில் பல்வேறு எதிர்வினைகள் எழுந்துள்ளன. அமைச்சர் நாரா லோகேஷ் இதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “ நான் என்னை பழித்துக்கொள்ளவே அவ்வாறு செய்தேன். மேலும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் அரசு மற்றும் சமூக ஒத்துழைப்பின் மூலம் அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமாக மாறும் என்று தலைமை ஆசிரியர் நம்பிக்கை தெரிவித்தார்.