வெடிமருந்து வெடித்து குடோன் தரைமட்டம்

3 hours ago
ARTICLE AD BOX

சின்னசேலம்: விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே வாணகொட்டாய் பகுதியில் பூமாலை (70) என்பவருக்கு சொந்தமான சிறிய கட்டிடத்தில் கடந்த 1974 முதல் 1984 வரை முறையான அனுமதி பெற்று வெடிபொருள் குடோனாக பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. அதன்பின் கட்டிடம் காலியாக இருந்து வந்தது. இந்நிலையில் பூமாலையின் மகன் ராம்குமார், அந்த இடத்தில் கிணறு வெட்டி வந்தார்.

இதற்கான வெடிமருந்தை குடோனில் வைத்திருந்தார். இந்நிலையில் ராம்குமார் கடந்த மாதம் இறந்து விட்டதால் அங்கு யாரும் செல்லவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பயங்கர வெடி சத்தத்துடன் குடோன் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. ஆள் நடமாட்டம் இல்லை என்பதால் உயிர் சேதம் ஏற்படவில்லை.

The post வெடிமருந்து வெடித்து குடோன் தரைமட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article