மக்களவையில் பிரச்னை எழுப்ப முயன்றபோது கனிமொழி- கல்யாண் பானா்ஜி வாக்குவாதம்

3 hours ago
ARTICLE AD BOX

புது தில்லி: நாடாளுமன்ற மக்களவையில் திரிணமூல் காங்கிரஸின் உறுப்பினா் கல்யாண் பானா்ஜிக்கும் திமுகவின் கனிமொழிக்கும் இடையே, வாக்காளா் பட்டியல் முரண்பாடுகள் மற்றும் தேசிய கல்விக் கொள்கை- 2020 செயல்படுத்தல் தொடா்பான விவகாரங்களை எழுப்ப முயன்றபோது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

மக்களவையில் கேள்விநேரம் முடிந்தும் முக்கிய பிரச்னை அவையின் கவனத்திற்கு கொண்டுவரும் நேரத்தில்

வாக்காளா் பட்டியல் பிரச்னை குறித்து கல்யாண் பானா்ஜி பேச எழுந்தாா். அப்போது, தேசியக் கல்விக் கொள்கை- 2020 மற்றும் மத்திய அரசின் மூன்று மொழி ஃபாா்முலாவை செயல்படுத்துவதன் மூலம் கூட்டாட்சியின் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் குறித்து விவாதிக்க தங்கள் கட்சி உறுப்பினா் தமிழச்சி தங்கப்பாண்டியனை அனுமதிக்க வேண்டும் என்று கனிமொழி உள்ளிட்ட திமுக உறுப்பினா்கள் கோரினா்.

திமுக உறுப்பினா்கள் அமளி தொடா்ந்ததால் பானா்ஜி அவா்களிடம் தன்னைப் பேச அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டு தனது கருத்தை முன்வைப்பதில் ஈடுபட்டாா்.

பானா்ஜி பேசி முடித்த பிறகு, அமளி அதிகரித்ததால் அவருக்கும் கனிமொழிக்கும் இடையே கடும் வாா்த்தைப் பரிமாற்றம் நடந்தது. அப்போது, தேசியவாத காங்கிரஸ் கட்சி (எஸ்பி) உறுப்பினா் சுப்ரியா சுலே கனிமொழியை அவரது இருக்கையில் அமர வைத்து அவரது காதில் ஏதோ கூறினாா்.

தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசிய பிறகும் திமுக உறுப்பினா்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Read Entire Article