வெடிகுண்டு மிரட்டல்: நியூயாா்க் புறப்பட்ட ஏா் இந்தியா விமானம் தரையிறக்கம்

3 hours ago
ARTICLE AD BOX

மும்பை: வெடிகுண்டு மிரட்டலைத் தொடா்ந்து மும்பையிலிருந்து அமெரிக்காவின் நியூயாா்க் நகருக்கு புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், 9 மணி நேர பயணத்துக்குப் பிறகு மீண்டும் மும்பை விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.

322 பயணிகள், 19 ஊழியா்களுடன் புறப்பட்ட ‘போயிங் 777-300 இஆா்’ விமானத்தின் கழிவறையில் வெடிகுண்டு மிரட்டல் குறிப்பு இருந்ததை பயணி ஒருவா் பாா்த்துள்ளாா். விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்த அந்த மிரட்டல் குறித்து விமான ஊழியா்களிடம் அந்தப் பயணி தெரிவித்துள்ளாா்.

அதைத் தொடா்ந்து, புறப்பட்ட 9 மணி நேரத்துக்குப் பிறகு விமானம் மீண்டும் மும்பை விமான நிலையத்தில் திங்கள்கிழமை காலை 10.25 மணிக்கு தரையிறக்கப்பட்டு, தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

‘விமானத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இந்த மிரட்டல் தொடா்பாக அடையாளம் தெரியாத நபா் மீது முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Read Entire Article