ARTICLE AD BOX
வெச்சி செஞ்சிட்டாங்க.. பட்ஜெட்ல 24GB ரேம்.. 6000mAh பேட்டரி.. BYBASS சார்ஜிங்.. OLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் மார்கெட்டும் மிரளும்படியான பட்ஜெட்டில் 24 ஜிபி ரேம், 6000mAh பேட்டரி, பைபாஸ் சார்ஜிங், ஓஎல்இடி டிஸ்பிளே, 80W சூப்பர் சார்ஜிங், விசி கூலிங் சிஸ்டம் போன்ற நம்ப முடியாத பிரீமியம் பீச்சர்களுடன் நுபியா நியோ 3 ஜிடி (Nubia Neo 3 GT) களமிறங்கி இருக்கிறது. இதுபோக சைபர் மெக்கா டிசைன், ஆர்ஜிபி லைட், டூயல் கேமிங் ஷோல்டர் டிரிகர்கள் போன்ற பீச்சர்களுடன் கேமிங் பிரியர்களையும் தட்டித்தூக்கி இருக்கிறது. இந்த நுபியாவின் விவரங்கள் இதோ.
கேமிங் பிரியர்களுக்கான டிசைன் மற்றும் பீச்சர்களில் பின்னி எடுக்கிறது. சைபர்-மெக்கா (Cyber-Mecha) டிசைனில் மினி எல்இடி (Mini LED) மற்றும் ஆர்ஜிபி லைட் (RGB Light) பேக் செய்துள்ளது. பிளாட்-கேமரா டிசைன் வருகிறது. இந்த டிசைனில் எலக்ட்ரோ எல்லோ (Electro Yellow) மற்றும் இன்டர்ஸ்டெல்லர் கிரே (Interstellar Gray) கலர்களில் வருகிறது.

நுபியா நியோ 3 ஜிடி அம்சங்கள் (Nubia Neo 3 GT Specifications): பிளாட் டிசைனில் 6.8 இன்ச் (1080 x 2392 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 1200Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் P3 கலர் காமட் கிடைக்கிறது.
இந்த டிஸ்பிளேவுக்கு ஏற்ப பேக்கப் கொடுக்கும்படி பேட்டரி சிஸ்டம் கிடைக்கிறது. 80W சூப்பர் சார்ஜிங் (Super Charging) மற்றும் பைபாஸ் சார்ஜிங் (Bybass Charging) சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரி ஹீட், லாக்-ப்ரீ அவுட்புட் கொடுக்கும்படி விசி கூலிங் சிஸ்டம் (VC Cooling System) வருகிறது. கேமிங் சிப்செட் உள்ளது.
நியோடர்போ பர்ஃபாமென்ஸ் என்ஜின் (NeoTurbo Performance Engine) சப்போர்ட் கொண்ட யுனிசோக் டி9100 6என்எம் 5ஜி (Unisoc T9100 6nm 5G) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு ஏற்ப 12 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி டைனாமிக் ரேம் (Dynamic RAM) கிடைக்கிறது. ஆகவே, 24 ஜிபி ரேம் கொடுக்கும் மாடலாக இந்த நுபியா நியோ 3 ஜிடி இருக்கிறது.
கேமிங் பிரியர்களுக்காக ஏஐ கேம் ஸ்பேஸ் 3.0 (AI Game Space 3.0) பீச்சர்கள் கிடைக்கின்றன. ஆகவே, ஏஐ கேமிங் கம்பானியன் (AI Gaming Companion), ஏஐ டிரிகர் (AI Trigger) மற்றும் ஏஐ பிகேவியரல் லெர்னிங் (AI Behavioral Learning) பீச்சர்கள் கிடைக்கின்றன. இதுபோக ஏஐ ரியல் டிரான்ஸ்லேட் (AI Real Translate) பீச்சர் கிடைக்கிறது.
50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா கொண்ட நியோவிஷன் ஏஐ போட்டோகிராபி சிஸ்டம் (Neovision AI Photography System) கிடைக்கிறது. ஆகவே, ஏஐ சூப்பர் நைட் (AI Super Night), ஏஐ ஸ்போர்ட் ஸ்னாப்ஷாட் (AI Sport Snapshot), ஏஐ எச்டிஆர் (AI HDR) மற்றும் ஏஐ மேஜிக் எடிட்டர் (AI Magic Editor) போன்ற ஏஐ பீச்சர்கள் இருக்கின்றன.
இந்த நுபியா நியோ 3 ஜிடி போனில் 16 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. வைப்ரேஷன் + ஹாப்டிக் + கேமிங் ஷோல்டர் டிரிக்கர் கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டிடிஎஸ்:எக்ஸ் அல்ட்ரா (DTS:X Ultra) சப்போர்ட் உள்ளது. இவ்வளவு அல்ட்ரா பிரீமியம் பீச்சர்களுடன் ரூ.27,420 விலைக்கு வந்துள்ளது. குளோபல் மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது.