உங்கள் PF கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டதா? இல்லையா? தெரிந்து கொள்ள இதோ 4 வழிகள்..

3 hours ago
ARTICLE AD BOX

உங்கள் PF கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டதா? இல்லையா? தெரிந்து கொள்ள இதோ 4 வழிகள்..

News
oi-Prakash S
| Published: Tuesday, March 4, 2025, 19:07 [IST]

இபிஎஃப்ஓ (EPFO) என்று அழைக்கப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organization) கொண்டுவரும் புதிய சேவைகள் மற்றும் திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதுவும் பி.எஃப் (PF) சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் இருந்து விரைவாகப் பணம் எடுத்துக்கொள்ளும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது இபிஎஃப்ஓ அமைப்பு.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். இந்தியாவில் பல கோடி ஊழியர்கள் பிஎஃப் கணக்கு (PF account) வைத்துள்ளனர். இந்த கணக்கில் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து ஒரு பகுதி செலுத்தப்படுகிறது. அதுவும் ஊழியர்களுக்கு தேவைப்படும் போது அல்லது ரிட்டயர்மெண்ட் காலத்தில் இந்த பணம் மிகவும் உதவியாக இருக்கும்.

உங்கள் PF கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டதா? இல்லையா?

பொதுவாக PF கணக்கில் ஊழியர் தன் சம்பளத்தில் 12 சதவீதத்தை மாதம் மாதம் டெபாசிட் செய்ய வேண்டும். அதேசமயம் அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் தரப்பிலும் பங்களிப்பு செய்யப்படும். இப்படி டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு வட்டியும் வழங்கப்படும். இந்தத் திட்டத்தை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு நிர்வகித்து வருகிறது.

இப்போது உங்கள் PF கணக்கில் சரியாக பணம் டெபாசிட் செய்யப்படுகிறதா இல்லையா என்பதை தற்போது ஆன்லைன் மூலம் மிகவும் சுலபமாக தெரிந்துகொள்ள முடியும். அதாவது பிஎஃப் கணக்கில் இருக்கும் பேலன்ஸ்-ஐ ஆன்லைன் மிகவும் சுலபமாக தெரிந்துகொள்ளலாம்.

இணையதளம்: முதலில் www.epfindia.gov.in என்ற EPFO இணையதளத்திற்கு சென்று Our Services என்பதை தேர்வு செய்யவும். அதன்பின்பு For Employees என்பதை கிளிக் செய்யவும். பிறகு மெம்பர் பாஸ்புக் என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து உங்கள் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN) மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து லாகின் செய்ததும், உங்களது பாஸ்புக், பிஎஃப் தொகை, எவ்வளவு தொகை டெபாசிட் செய்யப்பட்டது போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள முடியும்.

எஸ்எம்எஸ் : பிஎஃப் பேலன்ஸ்-ஐ எஸ்எம்எஸ் மூலம் தெரிந்துகொள்ள EPFOHO UAN என டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்பவும். நீங்கள் மெசேஜ் அனுப்பியவுடன் உங்கள் பதிவு செய்யப்பட்ட நம்பருக்கு பிஎப் பேலன்ஸ் அனுப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மிஸ்டு கால்: EPFO அமைப்பு மிஸ்டு கால் மூலம் பிஎஃப் பேலன்ஸ்-ஐ சரிபார்க்கும் வசதியை வழங்கி உள்ளது. அதன்படி உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள். சில நொடிகளில் உங்கள் மொபைலுக்கு PF பேலன்ஸ் அனுப்பப்படும்.

UMANG அப்ளிகேஷன்: நீங்கள் முதலில் UMANG அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும். அடுத்து EPFO என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும். பின்னர் "Employee-Centric Services" என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது உங்கள் UAN நம்பர் மற்றும் OTP-ஐ வழங்கவும். அதன்பின்னர் உங்கள் பிஎஃப் பேலன்ஸ் விவரங்களைச் சரிபார்க்கலாம்.

அதேபோல் வருங்கால வைப்பு நிதி (EPF) திட்டத்தில் உள்ள சந்தாதாரர்கள், தங்கள் பிஎஃப் கணக்கை எளிதாக நிர்வகிக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக EPFO​​ 3.0 என்ற திட்டத்தை செயல்படுத்தி ஏடிஎம் மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் நடைமுறையை அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதுதவிர ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு ஊழியர்கள் மாறும் போது, நிறுவனத்தின் தேவை இல்லாமல், UAN வைத்துள்ள பிஎஃப் சந்தாதாரர்கள் தாமாகவே இணையதளம் வழியாக, விண்ணப்பித்து பிஎஃப் கணக்கை புதிய நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ளும் வகையில் எளிமைப்படுத்தியது.

இதற்கு அடுத்து EPF உறுப்பினர்கள் தங்கள் உரிமைக்கோரல் தொகையை யுபிஐ (UPI) மூலம் பெறுவதற்கான முயற்சியில் EPFO அமைப்பு ஈடுபட்டுள்ளது. ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான பிளானை EPFO அமைப்பு தயாரித்துள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் யுபிஐ தளங்களில் இந்த வசதியை அறிமுகப்படுத்த நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என்று கூறப்படுகிறது.

EPFO அமைப்பின் கீழ் இருக்கும் சுமார் 7.4 மில்லியன் உறுப்பினர்களுக்கு எளிதாகப் பணம் எடுப்பதற்கு உதவுவதற்கும் யுபிஐ ஒருங்கிணைப்பு செயல்பாட்டில் ஆர்வம் காட்டி வருகிறது EPFO அமைப்பு. அதுவும் UPI உடன் EPF கணக்குகள் இணைக்கப்பட்டால் அனைத்து உறுப்பினர்களும் டிஜிட்டல் வாலெட் மூலம் தங்கள் உரிமை கோரல் தொகையை எளிதாக பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
How to know whether money has been deposited in your PF account or not? Here are 4 ways
Read Entire Article