அடுத்த Infinix 5ஜி போன் ரெடி.. 108MP கேமரா.. 67W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

6 hours ago
ARTICLE AD BOX

அடுத்த Infinix 5ஜி போன் ரெடி.. 108MP கேமரா.. 67W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

Mobile
oi-Prakash S
| Published: Tuesday, March 4, 2025, 20:07 [IST]

இன்பினிக்ஸ் (Infinix) நிறுவனம் விரைவில் இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ (Infinix GT 30 Pro) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது வரும் வாரங்களில் இந்த புதிய இன்பினிக்ஸ் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ போனின் முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ அம்சங்கள் (Infinix GT 30 Pro specifications): 6.78-இன்ச் பிளாட் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1224 x 2720 பிக்சல்கள், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது சிறந்த திரை அனுபவத்தைக் கொடுக்கும்.

அடுத்த Infinix 5ஜி போன் ரெடி.. 108MP கேமரா.. எந்த மாடல்?

அதேபோல் டைமன்சிட்டி 8350 அல்டிமேட் சிப்செட் (Dimensity 8350-Ultimate chipset)உடன் இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் வீடியோ எடிட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி என மூன்று வேரியண்ட்களில் இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor) வசதி இந்த இன்பினிக்ஸ் போனில் உள்ளது.

XOS 15 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது.

OIS ஆதரவு கொண்ட 108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த இன்பினிக்ஸ் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

5500mAh பேட்டரி வசதியுடன் இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். குறிப்பாக இந்த போனில் நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். அதேபோல் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 67W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த புதிய இன்பினிக்ஸ் போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது, மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, இன்பினிக்ஸ் ஜிடி 30 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India
தொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about:
English summary
Infinix GT 30 Pro specifications leaked online: check full details here
Read Entire Article