ARTICLE AD BOX
கோவையில் வீட்டு மாடியில் கஞ்சா செடி வளர்த்த கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. கல்லூரி செல்ல வீடு எடுத்து தங்கி இருந்து மாணவர்களை குறி வைத்து கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனை தடுக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குனியமுத்தூர் காவல்துறை கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த தனியார் தங்கும் விடுதிகள், வீடுகள் திடீர் சோதனை நடத்தினர்.
அப்பொழுது ஒரு மாடியில் கஞ்சா செடிகளை மாணவர்கள் வளர்த்து வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 22 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து கஞ்சா செடியை வளர்த்து வந்த கல்லூரி மாணவர்களான அரியலூரைச் சேர்ந்த கலைவாணன் (வயது 21), கேரளா மாநிலம் கோழிக்கோடு சேர்ந்த விஷ்ணு (வயது 19) தனுஷ் (வயது 19) அவினவ் (வயது 19) அனுருத் (வயது 19) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இவர்கள் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது. கோவையில் கல்லூரி மாணவர்கள் கஞ்சா செடி வளர்த்து கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.