ARTICLE AD BOX

பெரும்பாலும் தென்கொரியாவை சேர்ந்த நடிகர், நடிகைகள் இந்தியாவில் அதிகமாக பிரபலமாக தான் இருக்கிறார்கள். அதற்கு காரணம் என்னவென்றால் அந்த நாட்டின் படங்கள் மற்றும் சீரிஸ்களை இந்தியர்களும் அதிகமாக பார்த்து வருகிறார்கள். அதாவது Squid Game உட்பட பல தொடர்கள் பிரபலமாக இருக்கிறது என்பது நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை. பலரும் இந்த சீரிஸ்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள்.
இந்நிலையில் தென்கொரியாவை சேர்ந்த கிம் சே ரோன் என்ற பிரபல இளம் நடிகை தன்னுடைய 24 வயதில் அவருடைய அப்பார்ட்மெண்டில் இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவர் Guitar man என்ற படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் திடீரென்று அவர் வீட்டில் இறந்து கிடந்தது குறித்து போலீஸ்க்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றியுள்ளனர். மேலும் அவர் மரணத்தில் சந்தேகப்படும் படி எந்த ஒரு விஷயமும் தென்படவில்லை என்று கூறியுள்ளார்கள்.