ARTICLE AD BOX
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா, பூஞ்சேரியில் உள்ள தனியார் மண்டபத்தில், இன்று நடைபெறவுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்தான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த விழா, காலை 10 மணி முதல் பகல் ஒருமணி வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள கட்சி நிர்வாகிகள் அனைவரும் 8 மணிக்கு முன்பாகவே அரங்கத்திற்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது, நிர்வாகிகள் யாரும் கூட்டத்திற்கு தொலைபேசி எடுத்துவர வேண்டாம் என்றும் கட்சியின் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனத் தலைவரும் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரஷாந்த் கிஷோர் உரையாற்ற உள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமை உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் பரப்புரை மேடையாக இதை விஜய் மாற்றுவார் என்று தெரிவிக்கப்படுகிறது, கட்சியின் உட்கட்டமைப்பு நிர்வாகிகள் நியமனம் 90% முடிவடைந்துள்ள நிலையில் கட்சியின் அடுத்த கட்ட பணிகள் குறித்தும் விஜயின் மக்களை நோக்கிய பயணம் குறித்தும் அவர் பேசுவார் எனக் கூறப்படுகிறது.
இந்தநிலையில், சென்னை பனையூரில் உள்ள தவெக விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கிட்டதட்ட 30 வயதுடையவராக கருதப்படும் அந்நபர், தனது காதில் செல்போன் வைத்து பேசுவதுபோல பேசி திடீரென வீட்டிற்குள் ஈசினார். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
செருப்பை வீசிய நபரிடம் , ‘எதற்காக செருப்பை வீசினீர்? ‘ என்று கேள்வி எழுப்பிய நிலையில், தான் தான் போலீஸுக்கு துப்பாக்கி சப்ளை செய்வதாகவும், வீட்டிற்குள் பூ போட்டதாகவும் , தமிழ்நாட்டு குழந்தைகள் கேரளாவில் உணவு இல்லாமல் இருப்பதாகவும் அவரை காப்பாற்ற வேண்டும். எனவே, இதை தெரிவிக்கதான் செருப்பை வீசியதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், செருப்பை செருப்பை வீசிய நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.