ARTICLE AD BOX
பாஜகவிற்கு அரசியல் சாசனம் என்பது 75 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் எழுதப்பட்டது. அதற்கு முன்னர் எழுதிய மனுநீதி சட்டத்தின் மூலம் இந்தியாவை ஆள வேண்டும் என சித்தாந்தத்தில் உள்ளனர் – சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் எம்பி பேட்டி.சிவகங்கை நகராட்சி பேருந்து நிலைய விரிவாக்க பணிக்கான பூமி பூஜை விழாவில் பங்கேற்ற பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்பி கார்த்திக் சிதம்பரம் செய்தியாளரை சந்தித்தாா்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அளித்த பேட்டியில், ”தமிழக முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாகவும் , இதனை தமிழக அரசிடம் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளதாகவும், தமிழக அரசு விரைவில் மருத்துவர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவார்கள், அப்போது இதற்கு தீர்வு ஏற்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அமைந்தால் தமிழகம் பாதிக்கப்படும் இதற்கு தமிழக முதல்வர் அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்ததை வரவேற்கிறேன்.
மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர்கள் ஒதுக்கினார்கள் என்றால் ஜனத்தொகை குறைந்த மாநிலங்கள் பாதிக்கப்படும் .புதிய கணக்கின்படி மூன்றில் ஒரு பங்கு தான் வரும் . இக்கூட்டத்தில் ஒரு கட்சியைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பிரதிநிதித்துவம் அளிப்பதை தமிழ்நாட்டின் மீது பற்றுக் கொண்டிருக்கின்ற எந்த ஒரு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.
மேலும் ஓராண்டை கடந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழக வெற்றி கழகம் இன்னும் பல ஆண்டுகளைக் கடக்க நீண்ட பயணத்தை மேற்கொள்ள வேண்டும். பிரசாந்த் கிஷோர் பணத்திற்காக ஆலோசனை வழங்குபவர். அவரது செயல்பாடுகள் தவெக கட்சிக்கு எடுபடுகிறதா எனப் பார்க்க வேண்டும். பாஜகவிற்கு அரசியல் சாசனம் என்பது 75 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் எழுதப்பட்டது. அதற்கு முன்னர் எழுதிய மனுநீதி சட்டத்தின் மூலம் இந்தியாவை ஆள வேண்டும் என்ற சித்தாந்தத்தில் உள்ளனர். ஆதலால் பாஜகவினர் என்றுமே அம்பேத்கரை மதிக்க மாட்டார் என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.