வீட்டில் உங்கள் வைஃபை வேகம் குறைவாக உள்ளதா?

21 hours ago
ARTICLE AD BOX
சுருக்கம் செய்ய
வீட்டில் உங்கள் வைஃபை வேகம் குறைவாக உள்ளதா?

வீட்டில் உங்கள் வைஃபை வேகம் குறைவாக உள்ளதா? வேகத்தை அதிகரிக்க இதை டிரை பண்ணுங்க

எழுதியவர் Sekar Chinnappan
Mar 16, 2025
02:09 pm

செய்தி முன்னோட்டம்

ஒவ்வொரு வீட்டிலும் வைஃபை இன்றியமையாத பகுதியாக மாறிவிட்டது. குறிப்பாக கொரோனா தொற்றுநோய்க்குப் பிறகு, வீட்டிலிருந்து வேலை மற்றும் ஆன்லைன் கல்வி வழக்கமாகிவிட்டதால் பெரும்பாலான வீடுகளில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.

வைஃபை இணைப்பு செயல்பாட்டில் இருந்தபோதிலும், பல பயனர்கள் மெதுவான வேகத்தையே பெறுவதாக புகார்கள் வருகின்றன.

இது சேவையில் உள்ள குறைபாட்டினால் ஏற்படும் சிக்கல்களாக இல்லாமல், முறையற்ற வைஃபை அமைப்பு காரணமாகவும் இருக்கலாம்.

வைஃபை செயல்திறனைப் பாதிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று ரூட்டரின் இடம். சுவர்கள் மற்றும் அலமாரிகளிலிருந்து விலகி, மைய இடத்தில் அதை வைப்பது சிறந்த கவரேஜை உறுதி செய்கிறது.

பல மாடி வீடுகளுக்கு, வைஃபை ரேஞ்ச் எக்ஸ்டெண்டரைப் பயன்படுத்துவது இணைப்பை மேம்படுத்தலாம்.

அதிர்வெண் பேண்ட்

அதிர்வெண் பேண்டை சரிசெய்தல்

மற்றொரு முக்கியமான சரிசெய்தல் பொருத்தமான அதிர்வெண் பேண்டைத் தேர்ந்தெடுப்பதை உள்ளடக்கியது. 5 GHz பேண்ட் அதிக வேகத்தை வழங்குகிறது.

ஸ்ட்ரீமிங் மற்றும் கேமிங்கிற்கு ஏற்றது, ஆனால் குறுகிய வரம்பைக் கொண்டுள்ளது. இதற்கு நேர்மாறாக, 2.4 GHz பேண்ட் பரந்த கவரேஜை வழங்குகிறது.

ஆனால் குறைந்த வேகத்தைக் கொண்டுள்ளது. இது அடிப்படை பிரவுசிங் மற்றும் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களுக்கு ஏற்றதாக அமைகிறது.

குளிர்சாதன பெட்டிகள் மற்றும் மைக்ரோவேவ் போன்ற உலோகப் பொருட்கள் வைஃபை சிக்னல்களில் தடையை ஏற்படுத்தலாம்.

இதுபோன்ற தடைகளிலிருந்து ரூட்டரை விலக்கி வைப்பது அல்லது அதிவேக சாதனங்களுக்கு கம்பி ஈதர்நெட் இணைப்பைப் பயன்படுத்துவது செயல்திறனை மேம்படுத்தலாம்.

ரீஸ்டார்ட்

ரூட்டரை ரீஸ்டார்ட் செய்வது நல்லது 

கூடுதலாக, ஒவ்வொரு சில நாட்களுக்கு ஒருமுறை ரூட்டரை ரீஸ்டார்ட் செய்வது நெட்வொர்க் நெரிசலைக் குறைத்து இணைப்பைப் புதுப்பிக்கிறது.

வேகத்தையும் நிலைத்தன்மையையும் அதிகரிக்கிறது.

இந்த எளிய பயனுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், பயனர்கள் தங்கள் வைஃபை செயல்திறனை மேம்படுத்தலாம் மற்றும் வீட்டிலேயே தடையற்ற இணைய இணைப்பை சிக்கலின்றி பயன்படுத்த முடியும்.

Read Entire Article