விவாகரத்து சர்ச்சை… முதல்முறையாக வாய் திறந்த மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி!

4 hours ago
ARTICLE AD BOX

Madhampatti Rangaraj: பிரபல சமையல் கலைநிபுணரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜின் விவாகரத்து சர்ச்சைக்கு அவர் மனைவி ஸ்ருதி ரங்கராஜ் முதல் முறையாக பதில் சொல்லி இருக்கும் விஷயம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் மாதம்பட்டி ரங்கராஜ். முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றாலும் தொடர்ச்சியாக அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் அமையவில்லை. இதை தொடர்ந்து அவர் தன்னுடைய குடும்ப பிசினஸில் ஆர்வம் காட்டினார்.

தற்போது தமிழ் சினிமா பிரபலங்கள் யாராக இருந்தாலும் தங்களுடைய வீட்டு விசேஷங்களுக்கு மாதம்பட்டி ரங்கராஜை கேட்டரிங் அழைப்பது வழக்கமாக இருக்கிறது. இதைத்தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியின் பிரபல குக் வித் கோமாளி ஷோவில் நடுவராக கலந்து கொண்டார்.

 

இதை தொடர்ந்து அவர் மீண்டும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது அவர் மீது ஒரு சர்ச்சை உருவாகி இருக்கிறது. ரங்கராஜ் ஏற்கனவே ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இத்தம்பதிக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.

ஆனால் கடந்த சில நாட்களாக மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடைய காஸ்டியூம் டிசைனர் ஆன ஜாய் கிரிஸிடில்லாவுடன் காதலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதை உறுதி செய்யும் விதமாக ஜாய் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ச்சியாக ரங்கராஜ் உடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும் அவரை தன்னுடைய உயிர் என்று குறிப்பிடுவதும், இந்த காதலர் தினத்தை அவருடன் தான் செலவிட்டதாக அவர் வெளியிட்ட புகைப்படங்களும், வைரலாகி வருகிறது. மேலும் ரங்கராஜ் தன்னுடைய மேன் என அவர் குறிப்பிடுவது வைரல் நிலையில் அவரின் ஜாய் ரங்கராஜ் என்ற கையெழுத்தும் ரசிகர்களிடம் பரவியது.

ஒருவேளை ரங்கராஜ் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாரா என கேள்வி எழுந்தது. ஆனால் தற்போது முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜ் நான் தான் அவர் மனைவி என தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிலிட்டு இருக்கிறார்.

இதை பார்த்து ரசிகர்கள் அப்பொழுது ரங்கராஜ் விவாகரத்து செய்யாமல் இவருடன் சுற்றி வருகிறாரா என்ற கேள்வியையும் எழுப்பி வக்கீலான ஸ்ருதியிடம் அவர்கள் மீது விசாரணை செய்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் எனவும் பதிலளித்து வருகின்றனர்.

Read Entire Article