ARTICLE AD BOX
தமிழக அரசு விவசாயிகளுக்கு கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் பயன்பெறலாம். ஆவின் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
![விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! கறவை மாடு வாங்க ரூ.1.20 லட்சத்தை தூக்கிக்கொடுக்கும் தமிழக அரசு](https://static-gi.asianetnews.com/images/01j2qw20yxpx1fpk23cpc85gfc/istockphoto-2148752157-612x612--1-.jpg)
தமிழக அரசு சார்பாக விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரூ.4,366 கோடி பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கு ரூ.270 கோடி ரூபாயில் இயந்திரங்கள், கரும்பு விவசாயிகளுக்கு ரூ.651 கோடியில் சிறப்பு ஊக்கத் தொகை, ஆதிதிராவிட விவசாயிகளுக்கு 100 சதவிகித மானியம், குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஆடு, மாடு, கோழி வளர்ப்பிற்கு மானிய விலையில் கடனுதவி வழங்கப்படுகிறது.
![கறவை மாடு வாங்கும் திட்டம்](https://static-gi.asianetnews.com/images/01jj7b5vg4cf61rscg128zdbp1/Cow-1737560878596.jpg)
இந்த நிலையில் கறவை மாடு வாங்க தமிழக அரசு சார்பாக ஒரு லட்சத்து 20ஆயிரம் கடன் உதவி வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் - (TABCEDCO)சார்பில் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் இந்த கடன் உதவி வழங்கப்படுகிறது.
![கறவை மாடு வாங்க 1.20 லட்சம் கடன் உதவி](https://static-gi.asianetnews.com/images/01jkd03x7mgwzwsxwczfamk63k/whatsapp-image-2025-02-06-at-11.03.51.jpeg)
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களில் பயனாளிகளைத் தேர்ந்தெடுத்து பால் பண்ணை தொடங்குவதற்கு உயர்ந்த பட்சமாக ஒரு பயனாளிக்கு 2 கறவை மாடுகள் (எருமை உட்பட) வாங்க ரூ.1,20,000, கறவை மாடு ஒன்றுக்கு ரூ.60,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடனை திரும்ப செலுத்துவதற்கு 3 ஆண்டு காலம் கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 1.20 லட்சம் ரூபாய் கடன் உதவிக்கு ஆண்டு வட்டியை பொறுத்த வரைக்கும் 7 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பயனாளிகளின் பங்கு 5% எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![தகுதிகள் என்ன.?](https://static-gi.asianetnews.com/images/01j61me1trckh9f23jcpx8mrwa/gift-for-cattle-farmers-1724484355928.jpg)
* பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர் - ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்குள்.
வயது: 18-60 வரை
மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் உறுப்பினராக இருத்தல் வேண்டும்.
குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும்.
![தேவைப்படும் ஆவணங்கள்- விண்ணப்பிக்கும் முறை](https://static-gi.asianetnews.com/images/01j2p21pvx2vbda9zw0mfk3c0e/istockphoto-1419564519-612x612--1-.jpg)
தேவைப்படும் ஆவணங்கள்
சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ். வங்கி கோரும் அடமானத்திற்குரிய ஆவணங்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம். கூட்டுறவு கடன் சங்கங்கள் (ம) வங்கிகள், ஆகிய இடங்களில் விண்ணப்பிக்க வேண்டும்