விழுப்புரத்தில் 3ஆவது புத்தகத் திருவிழா தொடக்கம்

20 hours ago
ARTICLE AD BOX

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் மூன்றாவது புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் (பபாசி) ஆகியவை இணைந்து நடத்தும் மூன்றாவது ஆண்டு புத்தகத் திருவிழா மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி 12 -ஆம் தேதி வரை நகராட்சித் திடல் பகுதியில் நடைபெறவுள்ளது.

இந்த புத்தகத் திருவிழாவுக்காக 50 -க்கும் மேற்பட்ட பல்வேறு பதிப்பகங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்தார். எம்.பி.துரை. ரவிக்குமார், எம்எல்ஏக்கள் விழுப்புரம் இரா. லட்சுமணன், விக்கிரவாண்டி அன்னியூர் அ.சிவா, உளுந்தூர்பேட்டை ஏ.ஜெ. மணிக்கண்ணன் முன்னிலை வகித்தனர்.

ஆளுநரிடம் கோரிக்கை மனு அளித்த மீனவர்கள்!

வனம் மற்றும் கதர் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க.பொன்முடி புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்து, அரங்குகளைப் பார்வையிட்டு, விழாப் பேரூரையாற்றினார்.

இந்த விழாவில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் ஷீலாதேவி சேரன், நகர்மன்றத் தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, துணைத் தலைவர் சித்திக் அலி, திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷி நிகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த புத்தகத் திருவிழாவில் கலை, இலக்கியம், புதினம், நாவல் என பல்வேறு தலைப்புகளில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு தலைப்புகளில் ஆளுமைகள் பேச உள்ளனர்.

தொடக்க விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Read Entire Article