ARTICLE AD BOX
தேங்காய் பாலை சாப்பிட்டால் சகல நோயும் பறந்து ஓடிடுமே! சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?
சென்னை: தேங்காய் பாலை குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா? அது போல் தேங்காய்க்கும் மனிதனுக்கும் இருக்கும் ஒற்றுமை என்ன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இதுகுறித்து நல்லது மற்றும் நல்லது மட்டுமே எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும் தேங்காய் பால்.

தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை தெரியுமா, நாம், அன்னை வயிற்றிலிருந்து பூமிக்குவர 10 மாதம்! அதுபோல தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும்!
பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான்! ஆனால்,எப்பொழுது கொழுப்பு
உருவாகுமென்றால், அதை சமைக்கும் போதுதான்..., தேங்காய் கொழுப்பாய் மாறும்!
தேங்காயை குருமா வைத்து சமைத்து உண்டால் கெட்ட கொழுப்பாக (கொலஸ்ட்ரால்) மாறிவிடும். சமைக்காமல் அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு
முடிந்த அளவு தேங்காயை பச்சையாக சாப்பிடுங்கள்... தேங்காயை பச்சையாக
ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மைகள்!
தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால்,
அதுதான் அமிர்தம்!
தேங்காய் பால் உடலின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் ஆற்றல் மிக்கது. எனவே அடிக்கடி தேங்காய் பாலை அருந்தி வந்தால் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
தேங்காய் பாலில் நார்ச்சத்து , வைட்டமின் C, E, B1, B3, B5, மற்றும் B6, மினரல், இரும்புச் சத்து, செலினியம், சோடியம், கால்சியம் ,மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நிறந்துள்ளன.
தேங்காய் பால் மாங்கனீஸ் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அதை அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.
உடலில் உள்ள திசுக்களின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.
செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்து உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்கிறது.
கல்லீரல் வீக்கம், கல்லீரல் கொழுப்பு போன்ற கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் வலிமை கொண்டது.
தேங்காய் பாலில் லாரிக் ஆசிட் இருப்பதால் கொழுப்பின் அளவைக் குறைத்து இதயத்திற்கு ஆரோக்கியம் அளிக்கும்.
தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேறெதிலும் இல்லை.
சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும்!
உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும்!
இரத்தத்தை சுத்தமாக்கும், உடலை உரமாக்கும், உச்சிமுதல் பாதம்வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்.
தேங்காயை துருவி சிறிது, நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு மாலை சிற்றுண்டியாக அளியுங்கள். பழங்காலத்தில், இறக்கும் தருவாயில் இருக்கும் நபர்களுக்கு தேங்காய் பால் கொடுத்து, வாழ்நாட்களை நீட்டிப்பு செய்துள்ளார்கள்.
காலையில் தேங்காயை துருவி, அதனை அரைத்து பாலெடுத்து அதனுடன்
நாட்டுச் சர்க்கரை அல்லது கருப்பட்டி அல்லது தேன் சேர்த்து, குழந்தைகளுக்கு தந்து பாருங்கள் , ஆரோக்கியம் சிறக்கும்.
தசை நரம்புகள் இறுக்கம்
வயதின் காரணமாகவும், தசை நரம்புகளுக்கு போதிய சாது கிடைக்க பெறாததனாலும் சிலருக்கு உடலின் பல பகுதிகளில் இருக்கும் தசைகள் நரம்புகள் போன்றவற்றில் இறுக்கம் ஏற்பட்டு மிகுந்த சிரமத்தை தருகிறது. வாரத்திற்கு குறைந்த பட்சம் மூன்று முறையாவது தேங்காய் பால் அருந்தி வருபவர்களுக்கு தசை, நரம்புகளில் ஏற்படும் இறுக்கத்தன்மை தளர்ந்து உடலுக்கு பலத்தை தருகிறது.
உடல் எடை
பெரும்பாலானோர் தேங்காய் பால் அதிகம் அருந்தினால் உடல் எடை கூடிவிடும் என்று கருதுகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் விலங்குகளில் இருந்து பெறப்படும் பாலில் இருக்கும் உடல் எடையை கூடும் தன்மையுள்ள கொழுப்புகளை விட, ஆரோக்கியமான சத்துகள் அதிகம் கொண்ட தேங்காய் பால் அவ்வப்போது அருந்துபவர்களுக்கு உடல் எடை கட்டுக்கோப்புடன் இருக்கும்.
இரும்பு சத்து
அனைவருக்குமே உடலில் இரும்பு சத்து சரியான அளவில் இருக்க வேண்டியது அவசியமாகும். இரும்பு சத்து குறைபாடுகளால் உடலில் வலிமை குறைதல், ரத்த சோகை போன்றவை ஏற்படுகிறது. வளரும் இளமைப் பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் தினமும் ஒரு கோப்பை தேங்காய் பாலை அருந்துவதால் கால் சதவீதத்திற்கும் அதிகமான இரும்பு சத்து ஒரு நாளைக்கு கிடைக்கிறது.
எலும்புகள்
எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியமாகும். அத்தோடு பாஸ்பரஸ் சத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையானதாக இருக்கிறது. இந்த பாஸ்பரஸ் உடலில் இருக்கும்
அனைத்து எலும்புகளின் தேய்மானத்தை தடுக்கிறது. தேங்காய் பால் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.
இளமை தோற்றம்
தேங்காய் பால் அதிகம் அருந்துபவர்களுக்கு வயதாவதால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி, தோலில் பளபளப்பு தன்மையை அதிகம் கூட்டுகிறது. தோலின் நிறத்தையும் கூட்டி, இளமை தோற்றத்தை தருகிறது கேரள மாநில மக்கள் பலரும் சரும பொலிவுடன் இருப்பதற்கு காரணம் அவர்கள் தினமும் தேங்காய் பால் அல்லது தேங்காயுடன் தொடர்புடைய உணவுகளை சாப்பிடுவதால் தான்.
கீல்வாதம்
கீல்வாதம் என்பது உடலின் ரத்தத்தில் யூரிக் அமிலங்களின் அதீத சேர்மானத்தால் உடலில் இருக்கும் மூட்டு பகுதிகளில் கடுமையான வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நோயாகும். செலினியம் எனப்படும் வேதிப்பொருள் இந்த கீல்வாத பிரச்னையை போக்கும் சக்தி பெற்றது. செலினியம் தேங்காய் பாலில் அதிகமுள்ளது தினமும் தேங்காய் பாலை அருந்துபவர்களுக்கு கீல்வாத பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது.
உடல் சுத்தி
நாம் தினந்தோறும் சாப்பிடும் உணவுகள், அருந்தும் நீர், சுவாசிக்கும் காற்று என அனைத்துமே நச்சுக்கள் நிறைந்ததாக இருக்கிறது. மாதத்திற்கு ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை நாள் முழுவதும் திட உணவுகள் ஏதும் உண்ணாமல் தேங்காய் பால் மட்டும் அருந்தி வந்தால் உடலில் உள்ள நச்சுகள் அனைத்தும் நீக்கி, உடல் உறுப்புகள் சுத்தமாகும்.
புராஸ்டேட் சுரப்பி
ஆண்கள் அனைவருக்குமே தங்களின் இனப்பெருக்க உறுப்புகளுக்கு அடியில், மலக்குடலுக்கு மேற்புறமாக அமைந்திருக்கும் சுரப்பி தான் புராஸ்டேட் சுரப்பி. இன்று பல ஆண்களுக்கும் நடுத்தர வயதை நெருங்கும் காலத்தில் புராஸ்டேட் சுரப்பியில் புற்று நோய் ஏற்படும் நிலை இருக்கிறது. தேங்காய் பால் அவ்வப்போது சாப்பிட்டு வரும் ஆண்களுக்கு புராஸ்டேட் புற்று ஏற்படுவததற்கான வாய்ப்புகள் குறைகிறது.
நோய் எதிர்ப்பு திறன்
ஒரு சிலருக்கு அவ்வப்போது ஜுரம், சளி போன்ற நோய்கள் அடிக்கடி ஏற்படுவதற்கு காரணம் அவர்களின் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு திறன் வலிமையின்றி இருப்பது தான். தேங்காய் பால் உடலின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்தும் ஆற்றல் மிக்கது. எனவே அடிக்கடி தேங்காய் பாலை அருந்தி வந்தால் உடலை சுலபத்தில் தொற்றி தாக்கக்கூடிய நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம்.
நீரிழிவு
உலகளவில் மக்களை அதிகம் பாதிக்கக்கூடிய நோய்களில் ஒன்றாக நீரிழிவு நோய் இருக்கிறது. நீரிழிவு நோய் வந்த பின்பு அவதிப்படுவதை விட அந்நோய் ஏற்படாமல் தடுப்பதே சிறந்தது. மாங்கனீஸ் சத்து உடலுக்கு அவசியமான சத்துக்களில் ஒன்று. இந்த சத்து, நீரிழிவு ஏற்படாமல் உடலை காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேங்காய் பாலில் மாங்கனீஸ் சத்து அதிகம் நிறைந்திருப்பதால் அதை அவ்வப்போது அருந்தி வருபவர்களுக்கு நீரிழிவு ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.
தேங்காயை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, அதை காட்டன் துணியில் வைத்து பிழிந்தால் தேங்காய் பால் கிடைக்கும். இத்துடன் பனை வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து தேங்காய் பாலை சுட வையுங்கள். தேங்காய்ப் பால் ஓரங்களில் நுரைத்து வரும் பொழுது நீங்கள் முதலில் எடுத்து வைத்துள்ள திக்கான தேங்காய்ப் பாலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தேங்காய்ப் பாலை எப்பொழுதும் பொங்க விடக்கூடாது. தேங்காய் பால் நுரைத்து பொங்கினால் கெட்டுப் போய்விடும். மீண்டும் இதே போல ஓரங்களில் நுரை தட்ட ஆரம்பித்ததும் மிக்ஸி ஜாரில் பொடியாக்கி வைத்துள்ள ஜாதிக்காய் மற்றும் ஏலக்காய் இரண்டும் கலந்த தூள் இதனுடன் சேர்த்து கலந்து கொண்டு அடுப்பை அணைத்து விட வேண்டும்.
இப்போது சுடச்சுட டம்ளரில் சுவையான தேங்காய்ப்பால் பரிமாற வேண்டியது தான். இதில் இருக்கும் எண்ணற்ற சத்துக்கள் நம் உடலை வலிமையாக வைத்துக் கொள்ளும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து நோய் தாக்குதல்களை குறைக்கும். இதில் இருக்கும் அற்புத சத்துக்கள் தாய்ப்பாலுக்கு நிகரானது என்று கூறினாலும் தகும். எனவே உங்களால் முடிந்த பொழுது அடிக்கடி இதை செய்து சாப்பிட்டு ஆரோக்கியம் பெறலாமே!
தேங்காய்ப் பாலை இரவில் சாப்பிடும்போது நெஞ்செரிச்சல் ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமென்றால், தேங்காய்ப் பாலில் சிறிது சுக்குப் பொடியும் மஞ்சளும் சேர்த்து சாப்பிடுங்கள்.
மஞ்சள் மற்றும் சுக்கின் மருத்துவ குணங்கள் தேங்காய்ப் பாலில் உள்ள கொழுப்பினால் வயிற்றுக் கோளாறுகள், நெஞ்செரிச்சல் ஆகியவை ஏற்படாமல் தடுக்கும். தேங்காய் பாலை குடித்தால் உடலில் இரத்தம் ஊறும், இரத்தம் சுத்தமாகும், ரத்த சோகை சரியாகும், ரத்த திட்டுகள் பெருகும். இவ்வாறு அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.