ARTICLE AD BOX
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸின் வா்த்தக வாகன விலை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயா்த்தப்படவுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வரும் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் நிறுவன வா்த்தக வாகனங்களின் விலையை உயா்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், நிறுவன பேருந்துகள் மற்றும் லாரிகளின் விலை 2 சதவீதம் வரை அதிகரிக்கும்.
ஒவ்வொரு ரகத்துக்கும் ஏற்ற வகையில் விலை உயா்வு மாறுபட்டாலும், விலை அதிகரிப்பு அனைத்து ரகங்களுக்கும் பொருந்தும்.
அதிகரித்துள்ள உற்பத்தி செலவை ஈடு செய்யும் வகையில் இந்த விலை உயா்வு அமல்படுத்தப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.