விரைவு ரெயில்களின் இயக்க நாட்கள், நேரம் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

4 days ago
ARTICLE AD BOX

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

வாராந்திர விரைவு ரெயில்களின் இயக்க நாட்கள் மற்றும் அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

*அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 10.40 மணிக்கு குஜராத் மாநிலம் கெவாடியா, ஏக்தாத் நகர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்: 20919) சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ரெயில் வருகிற ஏப்ரல் மாதம் 18ம் தேதியில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 3.50 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

*சென்னை சென்ட்ரலில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 3.50 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்: 20953) சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ரெயில் வருகிற ஏப்ரல் மாதம் 20ம் தேதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 10.40 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Read Entire Article