விரைவில் தொடங்கும் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு…. வெளியான புதிய தகவல்!

3 hours ago
ARTICLE AD BOX

ஜெயிலர் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.விரைவில் தொடங்கும் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு.... வெளியான புதிய தகவல்!

கடந்த 2023 ஆம் ஆண்டு நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் மற்றும் பலர் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நெல்சன், ரஜினி, அனிருத் ஆகியோரின் கூட்டணியில் ஜெயிலர் 2 திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க போவதாக சொல்லப்படுகிறது. எனவே எதிர்பார்ப்புகளும் எக்கச்சக்கமாக அதிகமாகி வருகின்றன. விரைவில் தொடங்கும் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு.... வெளியான புதிய தகவல்!அதேசமயம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் அறிவிப்பு வீடியோவையும் படக்குழு வெளியிட்டு அலப்பறை செய்திருந்தது. இந்நிலையில் இந்த படம் ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என சமீபத்தில் செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி வருகின்ற மார்ச் 10ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும், 20 நாட்கள் இதன் முதற்கட்ட படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. எனவே படக்குழு சார்பில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

Read Entire Article