விருச்சிகத்தின் ஆட்டம் ஆரம்பம்.. அஷ்டமசனி ஓவர்.. சனிப்பெயர்ச்சி பலன்கள் முழு விவரம் இதோ

11 hours ago
ARTICLE AD BOX

விருச்சிகத்தின் ஆட்டம் ஆரம்பம்.. அஷ்டமசனி ஓவர்.. சனிப்பெயர்ச்சி பலன்கள் முழு விவரம் இதோ

Astrology
oi-Pavithra Mani
Subscribe to Oneindia Tamil

சனிப்பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் மார்ச் 29 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. கும்பத்தில் இருந்து மீனத்துக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார். இந்த சனிப்பெயர்ச்சியில் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு என்ன விதமான பலன்கள் கிடைக்கும், எந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

எல்லோரும் எதிர்பார்க்கும் சனிப்பெயர்ச்சி வரும் மார்ச் 29 ஆம் தேதி நடைபெறப் போகிறது. கும்ப வீட்டில் இருக்கும் சனி மீனம் வீட்டிற்கு மாறுகிறார். பொதுவாக குருவின் வீட்டில் இருக்கக்கூடிய சனி பகவான் 12 ராசிகளுக்கும் பெரிதளவில் கெடுபலன்களை தர மாட்டார். 3, 6, 11 ஆம் இடங்களில் இருக்கும் சனி பகவான் மிகப்பெரிய யோக பலன்களைச் செய்வார். சிலருக்கு மட்டுமே சாதகமற்ற நிலை இருக்கும்.

Sani peyarchi Sani peyarchi palangal Viruchigam

ஏழரை சனியில் கூட அனைவருக்கும் பிரச்சனை ஏற்படாது. கிரகங்களில் முக்கியப் பெயர்ச்சியாக சனிப்பெயர்ச்சி பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நீதிமான், தர்மக்காரகன் என்று அழைக்கப்படும் சனி பகவான் மனிதன் செய்யும் கர்மங்களுக்கு ஏற்ப சுப பலன்களையும், அசுப பலன்களையும் கொடுப்பவர். நீதி, நேர்மை, தர்மம் ஆகியவற்றுக்கு உதாரணமான கிரகம் என்பதால் நல்லது, கெட்டது இரண்டின் தாக்கமும் அதிகளவு இருக்கும்.

சனீஸ்வரன் தான் மிகப்பெரிய கோடீஸ்வர யோகத்தை தரக்கூடிய வல்லமை வாய்ந்த கிரகம். முக்கியமான கிரகங்களில் வலிமை வாய்ந்த கிரகமாக சனி உள்ளது. பொதுவாக ஒரு ராசியில் அதிக காலம் இருக்கும் கிரகம் என்றால் அது சனி பகவான்தான். 12 ராசிகளில் எந்த ராசியில் சனி பெயர்ந்தாலும் அதற்கு முந்தைய, பிந்தைய ராசிகளை அதிகளவில் பாதிக்கும்.

நம்முடைய ஜாதகத்தில் 4 வீட்டை சனி தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். சனி ஒரு வீட்டில் இருக்கும் அந்த வீட்டு பலன்கள் சனி பகவானின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். 3, 7, 10 பார்வைகள் மூலமாக இன்னொரு 3 வீட்டை தனது ஆதிக்கத்தின்கீழ் வைத்திருக்கும். இதனால், ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அடுத்த இரண்டரை காலம் சனிப்பெயர்ச்சியின் தாக்கமே அதிகளவில் இருக்கும்

2025 ஆம் ஆண்டில் சனிப்பெயர்ச்சியானது 2025 மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவுள்ளது. சனி பகவான் கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அதாவது 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை அவர் மீனம் ராசியில் இருக்கப் போகிறார்.

அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எந்தவிதமான பலன்கள் கிடைக்கும், எச்சரிக்கையாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இப்போது அர்த்தாஷ்டம சனியாக இருக்கக்கூடிய சனி பகவான் 4 ஆம் இடத்தில் இருந்து 5 ஆம் இடத்துக்குப் போகிறார். 5 ஆம் இடத்தில் பெரிய யோகங்களை தர மாட்டார். ஆனாலும், பெரிய அளவில் கஷ்டங்களை கொடுக்க மாட்டார். கடந்த 6 மாதங்களாக விருச்சிக ராசிக்காரர்கள் யாரும் நன்றாக இல்லை..

உங்களுடைய ராசிநாதன் 8, 9 ஆம் இடங்களில் மறைவு ஸ்தானம், நீச்ச ஸ்தானம் எனும் அமைப்பில் பலவீனமாக இருப்பது ஒரு மாதிரியான கெட்ட அமைப்புதான். ஆனால், 5 ஆம் ஸ்தானமான குரு வீட்டுக்கு மாறப் போகும் சனி, குரு வீட்டில் இருப்பதால் பெரிய கெடுதல்களை செய்ய மாட்டார். கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் பிறகு முன்னேற்றத்தை தரக்கூடிய அமைப்பு உள்ளது.

வேலை மாற்றம், பதவி மாற்றம் உண்டாகும். ஏன் தான் பதவி மாற்றம் உண்டானதோ என்ற நிலை இருக்கும். பிள்ளைகளால் மனக் கஷ்டங்கள் வரும். பிள்ளைகளுக்கு முதல் ஒரு வருடத்தில் திருமணம் போன்றவை நடத்த முடியாத சூழல் உண்டாகும். திருமண விஷயங்களில் பிரச்சனைகள் ஏற்படும். பள்ளி, கல்லூரி பிள்ளைகள் கவனத்தை திசை திருப்பக்கூடிய தன்மைகளில் ஈடுபடுவார்கள். பிள்ளைகள் திசை மாறுவதால் உங்களுக்கு அதிக கவனம் தேவைப்படும் சூழல் உள்ளது.

சொந்த வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். நல்ல லாபத்தைக் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர் கட்டாயம் ஏற்படும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் உண்டாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வேலை ஆட்கள், உதவி ஆட்கள் கிடைப்பார்கள். அன்றாடம் பிழைக்ககூடிய துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல யோக பலன்கள் கிடைக்கும்.

குழந்தைகள் விஷயங்களைத் தவிர மற்ற அனைத்து அமைப்புகளும் உங்களுக்கு நன்றாக நடக்கும். பிள்ளைகள் தொடர்பான பிரச்சனைகள், குழப்பங்கள் உண்டாகும். இளைய பருவத்தினருக்கு 5 ஆம் இட சனி பெரிய பாதிப்புகளைக் கொடுக்காது. வேலை, தொழில் அமைப்புகளில் சுப தன்மைகள் கொடுக்கும். நல்ல படிப்பு கொடுக்கும். அவரவர் வயதிற்கேற்ப சுப சனியாக இருக்கும்.

More From
Prev
Next
English summary
This Saturn transit is going to bring yoga to Scorpio (Viruchigam) people. You can learn in detail about how this Saturn transit will be for Viruchigam people in this post.
Read Entire Article