ARTICLE AD BOX

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை 3-வது வார்டுக்கு உட்பட்ட லட்சுமி நகர் பகுதிக்கு காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. வழக்கம்போல நேற்றும் (பிப்.21) தண்ணீர் விடப்பட்டது. குடிநீரை பிடிக்க குடங்களுடன் ஆர்வத்துடன் சென்ற பொதுமக்கள் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அந்த குடிநீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து முகர்ந்து பார்த்தபோது துர்நாற்றம் வீசியது. இதனால், அவர்கள் தண்ணீர் பிடிக்காமல் காலி குடங்களுடன் காத்திருந்தனர். பின்னர் இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். பொதுமக்கள் புகாரின் அடிப்படையில் உடனடியாக காவிரி குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டது. இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், விராலிமலை பகுதிக்கு விநியோகம் செய்யப்படும் காவிரி குடிநீர் பெரும்பாலான நாட்களில் கலங்களாக வருகிறது. நேற்றைய தினம் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வந்ததால் கடுமையான துர்நாற்றம் வீசியது. இந்த குடிநீரை பயன்படுத்தினால் என்ன ஆவது? . ஆகவே, அசுத்தமான இந்த தண்ணீரை யாரும் பிடிக்கவில்லை. இதேபோல காமராஜர் நகர் பகுதியிலும் குடிநீர் கலங்கலாக வந்தது. பொதுமக்கள் போராட்டத்திற்கு பிறகு சரி செய்யப்பட்டது. ஆகவே, விராலிமலை பகுதிக்கு தூய்மையான காவிரி குடிநீர் விநியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
The post விராலிமலையில் காவிரி குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி…! appeared first on Rockfort Times.