அஜித்தை மிஞ்சிய பிரதீப்; பாக்ஸ் ஆபிஸில் விடாமுயற்சியை ஓட ஓட விரட்டிய டிராகன்!

3 hours ago
ARTICLE AD BOX

அஜித் குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படத்தை விட பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் அதிக வசூலை வாரிக்குவித்து கெத்து காட்டி வருகிறது.

Dragon vs Vidaamuyarchi

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக உருவெடுத்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். அவர் ஹீரோவாக நடித்தது இரண்டு படங்கள் தான், ஆனால் அதில் இளைஞர்களை கவர்ந்து தற்போது கோலிவுட்டின் சென்சேஷனாக மாறி இருக்கிறார். அவர் ஹீரோவாக அறிமுகமான லவ் டுடே திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்தது. அதன்பின்னர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்த திரைப்படம் தான் டிராகன். இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது.

Dragon

பிரதீப் ரங்கநாதனின் லவ் டுடே படத்தை ரூ.15 கோடி பட்ஜெட்டில் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம், டிராகன் திரைப்படத்தை அதைவிட டபுள் மடங்கு கூடுதல் பட்ஜெட்டில் டிராகன் திரைப்படத்தை தயாரித்தது. சுமார் 37 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோகர் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் தமிழில் டிராகன் என்கிற பெயரிலும் தெலுங்கில் ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன் என்கிற பெயரிலும் கடந்த பிப்ரவரி 21ந் தேதி திரைக்கு வந்தது.

இதையும் படியுங்கள்... கடைசி 20 நிமிடம் என்னை கண்கலங்க வைத்த படம் டிராகன் – இயக்குநர் ஷங்கர்!

Pradeep Ranganathan Dragons collection report

லவ் டுடே படத்தை போல் இளசுகளை டார்கெட் செய்து எடுக்கப்பட்ட இப்படம் முதல் நாளே பாக்ஸ் ஆபிஸில் பிக் அப் ஆக தொடங்கியது. பின்னர் பாசிடிவ் விமர்சனங்கள் குவிந்ததால் டிராகன் படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடியது. அந்த வகையில் ரிலீஸ் ஆன மூன்றே நாட்களில் ரூ.50 கோடி வசூலித்து மாஸ் காட்டிய இப்படம் நேற்று வேலை நாளிலும் ஹவுஸ் புல் காட்சிகளாக ஓடி பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்தது. அதன்படி திங்கட்கிழமை மட்டும் இப்படம் ரூ.3.81 கோடி வசூலித்து இருந்தது.

Dragon Overtake Vidaamuyarchi in Box Office

இதன்மூலம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆன படங்களில் முதல் திங்கட்கிழமை அதிக வசூல் ஈட்டிய படமாக டிராகன் மாறி உள்ளது. இதற்கு முன்னர் விடாமுயற்சி திரைப்படம் ரூ.2.75 கோடி வசூலித்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில், அதைவிட 1 கோடி கூடுதலாக வசூலித்து டிராகன் திரைப்படம் சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் பாக்ஸ் ஆபிஸில் அஜித்தை ஓவர்டேக் செய்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இதே வேகத்தில் சென்றால் விடாமுயற்சி படத்தின் லைஃப் டைம் வசூலை டிராகன் அசால்டாக முந்திவிடவும் வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்... லட்சங்களில் தடுமாறும் நீக்; கோடிகளை குவித்த டிராகன் - 4ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்

Read Entire Article