”விராட் கோலினா ஃபயருடா” சோசியல் மீடியாவை டேக் ஓவர் செய்த கிங் ரசிகர்கள்.. தெறிக்கும் மீம்ஸ்!

2 days ago
ARTICLE AD BOX

”விராட் கோலினா ஃபயருடா” சோசியல் மீடியாவை டேக் ஓவர் செய்த கிங் ரசிகர்கள்.. தெறிக்கும் மீம்ஸ்!

Memes
oi-Yogeshwaran Moorthi
Subscribe to Oneindia Tamil

துபாய்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் விளாசியதை தொடர்ந்து ரசிகர்கள் சோசியல் மீடியாவில் மீம்ஸை உருவாக்கி உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் சில சிறந்த மீம்ஸை பார்க்கலாம்.

பிரண்ட்ஸ் படத்தில் ராதாரவி, "200 வருஷமா ஓடிக் கொண்டிருந்த கடிகாரத்தை இப்படி அநியாயமா உடைச்சுட்டீங்களேடா" என்று சொல்வார். அதற்கு வடிவேலு, "அப்பாடா" என்று கூறி அலப்பறையை கூட்டுவார். நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி சதத்தை நெருங்கிய போது திடீரென ஹர்திக் பாண்டியா பவுண்டரி அடித்து அதிரடியை காட்டுவார். இதனால் விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதில் பிரண்ட்ஸ் படத்தில் வரும் ராதாரவியை பாகிஸ்தான் பவுலராகவும், உடைந்த கடிகாரத்தை ஹர்திக் பாண்டியாவாகவும், விராட் கோலி ரசிகர்களை ஹர்திக் பாண்டியாவாகவும் மாற்றி, "அப்பாடா.. அவுட்டாகிட்டான்யா" என்று சொல்வதாக உருவாக்கப்பட்டுள்ள மீம் ரகளையின் உச்சம்.

memes ind vs pak Virat Kohli champions trophy 2025 2025

புஷ்பா படத்தில் தனது அண்ணா மகளை கடத்தி கொண்டு சென்றதாக அல்லு அர்ஜூனிடம் சொன்ன பின், கதவை அடைத்து கொண்டு துப்பாக்கியுடன் வெளியில் வருவார். இதில் வரும் புஷ்பாவாக விராட் கோலியை மாற்றி, வங்கதேச அணியுடன் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த போது கதவை அடைத்து கொண்டு செல்வதாகவும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு துப்பாக்கியுடன் வேட்டையாடியதாகவும் உருவாக்கப்பட்டுள்ள மீம் அடங்காதவன்டா ரகம்.

memes ind vs pak Virat Kohli champions trophy 2025 2025

"திமிரு" படத்தில் கோலி சோடா சாப்பிட செல்லும் வடிவேலுவை வார்டன் என்று தெரிந்த பின் ஒரு கும்பல் வெளுத்துகட்டும். அதற்கு காலேஜ் வார்டன் என்று சொன்ன பிறகும், "வார்டன்னா அடிப்போம்.. அடிங்கா" என்று பொளந்து கட்டிவிடுவார்கள். இதில் வரும் வடிவேலுவை பாகிஸ்தான் அணியாகவும், வெளுத்து கட்டின் லேடியாக விராட் கோலியாகவும் மாற்றி, "பாகிஸ்தான் அணினா அடிப்போம்.. அடிங்கடா அவன" என்று உருவாக்கப்பட்டுள்ள மீம் சல்லி சல்லியா நொறுக்கிட்டீங்களேடா ரகம்.

memes ind vs pak Virat Kohli champions trophy 2025 2025

மிஸ் நந்தினி திரைப்படத்தில் காது கேட்காத ஒருவரிடம் தனது பர்ஸை கேட்கும் கவுண்டமணி, "பர்ஸ்.. பர்ஸ்.. பார்த்தியாடா.. நர்ஸோட பர்ஸ் இல்லடா.. என்னோட பர்ஸ்" என்று கூறுவார். இதில் வரும் கவுண்டமணியை விராட் கோலி ரசிகராகவும், காது கேட்காத நபரை ஹர்திக் பாண்டியாவாகவும் மாற்றி, "டேய்.. விராட் கோலி சதம் அடிக்கணும்.. ஸ்ட்ரைக் கொடுடா" என்று சொல்வதாகவும், அதற்கு ஹர்திக் பாண்டியா, "ஓ.. சிக்ஸ் அடிக்கணுமா" என்று புரிந்து கொண்டதாகவும் உருவாக்கப்பட்ட மீம் ஒவ்வொரு விராட் கோலி ரசிகனின் மனசாட்சி.

memes ind vs pak Virat Kohli champions trophy 2025 2025

பேட்ட படத்தில் ரஜினிகாந்த் ஸ்டைலாக சிகரெட் வைத்து தம் அடிப்பதை போல், லியோ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் விஜய்-ம் ஸ்டைலாக அமர்ந்து சிகரெட் பிடிப்பார். இதில் வரும் ரஜினியை சச்சின் டெண்டுல்கராகவும், விஜயை விராட் கோலியாகவும் மாற்றி உருவாக்கப்பட்டுள்ள மீம் மரணம் மாஸ் மரணம் ரகம்.

memes ind vs pak Virat Kohli champions trophy 2025 2025
memes ind vs pak Virat Kohli champions trophy 2025 2025
More From
Prev
Next
English summary
IND vs PAK: Fantastic memes from Social Media after Virat Kohli Scored his 82nd Century against Pakistan in the Champions Trophy 2025
Read Entire Article