தோனி பீஹாரியா? தவெக மேடையில் பிரசாந்த் கிஷோர் அப்படி சொன்னது ஏன் தெரியுமா? பின்னணி!

4 hours ago
ARTICLE AD BOX

தோனி பீஹாரியா? தவெக மேடையில் பிரசாந்த் கிஷோர் அப்படி சொன்னது ஏன் தெரியுமா? பின்னணி!

Chennai
oi-Yogeshwaran Moorthi
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் மேடையில் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பேசும் போது, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனியை பீஹாரி என்று அழைத்தது ரசிகர்களிடையே விவாதமாகி இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியைச் சேர்ந்த தோனியை எதற்காக பிரசாந்த் கிஷோர் பீஹாரி என்று அழைத்தார் என்பதை பார்க்கலாம்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் அருகே நடைபெற்றது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய், தேர்வு மேலாண்மை பிரிவு செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பங்கேற்றார்.

TVK Vijay Prashant Kishore MS Dhoni

தவெக தலைவர் விஜய் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை அழைத்து தனக்கு அருகிலேயே மேடையில் அமர வைத்து கொண்டார். இந்த விழாவில் பிரசாந்த் கிஷோருக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்காக தேர்தல் பணியாற்றிய பிரசாந்த் கிஷோர், தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக தவெகவுக்கு பணியாற்ற உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பிரசாந்த் கிஷோர் பேசும் போது, 2021ஆம் ஆண்டு திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக பணியாற்றிய பின் இந்த பணியில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டேன். தற்போது இங்கு வந்திருப்பதற்கு ஒரே காரணம் நண்பர் விஜய்தான். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை, விஜயை கட்சியாகவோ, தலைவராகவோ கருதவில்லை. தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கை விஜய் தான்.

நம்மில் பலரும் வாரிசு அரசியல் குறித்து போதுமான கவனம் கொடுப்பதில்லை. கபில் தேவ், சுனில் கவாஸ்கரின் வாரிசுகள் தான் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று இருந்திருந்தால், நமக்கு சச்சின் டெண்டுல்கர், தோனி அல்லது விராட் கோலி போன்ற வீரர்கள் கிடைத்திருப்பார்களா? தமிழ்நாட்டில் என்னைவிட பிரபலமான பீகாரி யாரென்றால் அது தோனி மட்டும்தான்.

ஆனால் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தவெகவை வெற்றிபெற வைத்தால், தமிழ்நாட்டில் தோனியை விடவும் பிரபலமான பீஹாரியாக நான் இருப்பேன் என்று தெரிவித்திருந்தார். தோனியை பீஹாரி என்று பிரசாந்த் கிஷோர் கூறி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தோனியை ஏன் பிரசாந்த் கிஷோர் பீஹாரி என்றார் என்ற கேள்வி எழுந்தது.

இந்தியாவில் ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது 2000ஆம் ஆண்டுதான். அதற்கு முன்பாக ராஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் பீகாருடனே இருந்தன. 1981ஆம் ஆண்டு ஜூலை 7ல் தோனி பிறந்த போது, ராஞ்சி பீகாருடன்தான் இருந்தது. இன்னும் சொல்லப் போனால் தோனி இந்திய அணிக்கு அறிமுகமான சில ஆண்டுகளுக்கு முன்பாகதான் ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. இதன் காரணமாகவே தோனியை பிரசாந்த் கிஷோர் பீஹாரி என்று கூறி இருக்கிறார்.

More From
Prev
Next
English summary
Why Prashant Kishore Called CSK Legend MS Dhoni as a Bihari in the TVK 2nd Annual Meeting
Read Entire Article