ARTICLE AD BOX
Ganguly: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி நேற்று நடந்த சாலை விபத்தில் நூலிழையில் உயிர்தப்பிய அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சியில் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்வதற்காக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தனது காரில் சென்றார். அப்போது, துர்காபூர் விரைவுச் சாலையில் தண்டன்பூர் அருகே சென்றுக்கொண்டிருந்தபோது, திடீரென ஒரு லாரி அவரது காரை முந்திச்சென்றது. இதனால், கங்குலியின் ஓட்டுநர் உடனடியாக பிரேக் பிடித்துள்ளார். இதையடுத்து, பின்னால், அடுத்தடுத்து வந்த வாகனங்கள் கங்குலியின் கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக கங்குலி உயிர்தப்பினார். இருப்பினும், அவருக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை.
சிறிதுநேரத்திற்கு பின், புறப்பட்ட கங்குலி பர்தமன் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அதைத் தொடர்ந்து பர்தமன் விளையாட்டு சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றொரு நிகழ்விலும் பங்கேற்றார். 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் கங்குலி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது . 2003 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை இந்திய அணியை அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: கிணற்றின் மீது கோழி..!! காப்பாற்ற சென்ற 14 வயது சிறுவன்..!! சடலமாக மீட்கப்பட்ட சோகம்..!!
The post விபத்தில் சிக்கிய கங்குலியின் கார்!. நூலிழையில் உயிர்தப்பிய அதிர்ச்சி!. appeared first on 1NEWSNATION - Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News.