ARTICLE AD BOX

மஹார் படைப்பிரிவின் 10-வது பட்டாலியனில் பணியாற்றும் அதிகாரி அவில்தார் நரேஷ் குமார். இவருக்கு அர்ஷ்தீப் சிங்க் (18) என்ற மகன் இருந்துள்ளார். இந்த நிலையில் நரேஷ் குமாரின் மகன் பிப்ரவரி 8ஆம் தேதி சாலை விபத்தில் இறந்துள்ளார். இவர் இறந்த ஒரு வாரத்திற்கு பிறகு பிப்ரவரி 16ஆம் தேதி நரேஷ் குமார் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார். இதில் கல்லீரல், சிறுநீரகம், கணையம் மற்றும் கண்ணின் கார்னியாவை தானம் செய்துள்ளார்.
இந்த உடல் உறுப்புகள் அனைத்தும் ராணுவ மருத்துவமனை ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மையத்திற்கு கிரீன் காரிடர் வழியாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இந்த உடல் உறுப்பு தானத்தை சந்திமந்தரில் அமைந்துள்ள கமாண்டு மருத்துவமனை மற்றும் அதன் மருத்துவ நிபுணர்களின் உதவியால் சாத்தியமாக்கப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்வது ஒரு மிகப்பெரிய உன்னதமான செயல் என்பதற்கு நரேஷ் குமார் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆவார். இந்த உறுப்பு தானம் மூலம் 6 பேருக்கு வாழ்வளிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து பலரும் ராணுவ வீரரான நரேஷ் குமாரை பாராட்டி வருகின்றனர்.