மே மாசம் ஸ்கூல் லீவு! திருப்பதிக்கு போக பிளானா? காலை 10 மணிக்கு ஆதார் கார்டுடன் ரெடியா இருங்க!

3 hours ago
ARTICLE AD BOX

மே மாசம் ஸ்கூல் லீவு! திருப்பதிக்கு போக பிளானா? காலை 10 மணிக்கு ஆதார் கார்டுடன் ரெடியா இருங்க!

Tirupati
oi-Vishnupriya R
Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையானை வரும் மே மாதம் தரிசனம் செய்ய ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு ரிலீஸாகின்றன. இதை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய அன்றாடம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் மக்களும் தங்கள் பயணத்தில் திருப்பதியை சேர்க்காமல் விட்டது கிடையாது.

Tirupati spirtuality Tirumala

அது போல் ஆண்டுக்கு ஒரு முறையாவது ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும் என்பதையும் பலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இன்னும் சிலர் நினைத்தாலே போதும் திருப்பதிக்கு செல்வோரும் இருக்கிறார்கள்.

இந்த நிலையில் திருப்பதிக்கு செல்ல இலவச தரிசனம், நடைபாதை தரிசனம் இவற்றையெல்லாம் தாண்டி ரூ 300 சிறப்பு தரிசனமும் இருக்கிறது. இந்த சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 3 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வகையில் உள்ளது. அந்த வகையில் தற்போது மே மாதம் திருப்பதிக்குச் செல்ல இன்றைய தினம் காலை 10 மணிக்கு முன்பதிவு செய்யப்படுகிறது.

இதற்கான டிக்கெட்டுகளும் ரிலீஸ் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் 4 லட்சம் டிக்கெட்டுகள் ரிலீஸ் செய்யப்படுகின்றன. அந்த வகையில் இன்றைய தினமும் அதே அளவில் டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ரிலீஸ் செய்யும் என தெரிகிறது.

தேவஸ்தானத்தின் இணையதள முகவரியில் யூசர் நேம், பாஸ்வேர்டு கொடுத்து காலை 10 மணிக்கு டிக்கெட்டுகளை புக் செய்யலாம். அது போல் போனிலும் திருப்பதி தேவஸ்தான செயலியை டவுன்லோடு செய்துக் கொண்டும் முன்பதிவு செய்யலாம்.

முன்பதிவு செய்ய 12 வயதுக்கு மேற்பட்டவர்களின் பெயர், வயது, பாலினம், அடையாள அட்டையின் எண் ஆகியவை தேவைப்படும். இவற்றுடன் தயாராக இருந்து 10 மணிக்கு லாகின் செய்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். அதிலேயே கூடுதல் லட்டுக்கு பணத்தையும் செலுத்திக் கொள்ளலாம்.

அது போல் மாலை 3 மணிக்கு அறைகளுக்கான முன்பதிவு நடைபெறும். ரூ 100 கட்டணத்தில் அறைகள் 24 மணி நேரத்திற்கு தங்கும் வகையில் இருக்கும். இதற்காக டெபாசிட் தொகையாக ரூ 500 செலுத்த வேண்டும்.

கடந்த 23 ஆம் தேதி அங்கபிரதட்சிணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நடந்தது. அது போல் அன்று மாலை 3 மணிக்கு மூத்த குடிமக்கள் தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
English summary
Tirumala Tirupati Devasthanams releases Rs 300 special darshan tickets for month of May today at 10 am.
Read Entire Article