வித்தியாசமான சத்துமிகுந்த மொறுமொறு வடைகள்!

4 days ago
ARTICLE AD BOX

புளியங்கொட்டையில், வயிற்றுக்கு நன்மை பயக்கும், வைட்டமின் சி, நார்ச்சத்து, கால்சியம் போன்ற சத்துக்கள் உள்ளன.

புளியங்கொட்டை வடை

தேவையான பொருட்கள்:

புளியங்கொட்டை _1 கப்

உளுந்து _1கப்

சின்ன வெங்காயம் _15

பச்சை மிளகாய் _2

இஞ்சி _1 துண்டு

சோள மாவு _1 ஸ்பூன்

செய்முறை: புளி கொட்டையை கடாயில் நன்கு வெடிக்கும்வரை வறுத்து எடுக்கவும். பின் உரலில் போட்டு லேசாக இடித்து தோலை நீக்கி பின் 8 – 12 மணிநேரம் நீரில் ஊறவிடவும். உளுந்தை அரை மணிநேரம் ஊறவிட்டு நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும். 12 மணி நேரம் ஊறவைத்த புளி கொட்டையை மிக்சியில் லேசாக அரைத்து எடுக்கவும்.

உளுந்து அரைத்த புளி கொட்டையை ஒன்றாக சேர்த்து நறுக்கிய வெங்காயம் இஞ்சி பச்சை மிளகாய் உப்பு சேர்த்து வடையாக சுட்டு எடுக்கவும். புளியங்கொட்டை வடை தயார். புளியங்கொட்டையை மையாக அரைக்க தேவை இல்லை.

இலந்தை வடை

தேவையான பொருட்கள்:

இலந்தைபழம் _1 கப்

பச்சைமிளகாய் _4

வரமிளகாய் _5

வெல்லம் இடித்தது _1 கப்

கொத்தமல்லி இலை _2 கைப்பிடி

உப்பு _ சிறிது

தாளிக்க

கடுகு _1 டீஸ்பூன்

உளுந்தம்பருப்பு _1 டீஸ்பூன்

கடலைப்பருப்பு _1 டீஸ்பூன்

பெருங்காயம்_ சிறிது

இதையும் படியுங்கள்:
சமையலில் அதிகமாக சேர்ந்துவிட்ட உப்பைக் குறைக்க 6 டிப்ஸ்!
different and nutritious vadas!

செய்முறை:

இலந்தை பழத்தை நன்கு கழுவி புழு நீக்கி சுத்தம் செய்து வைக்கவும். மிக்ஸியில் பச்சை மிளகாய், உப்பு, வரமிளகாய் அரைக்கவும்.அதில் வெல்லம் பொடி செய்து சேர்த்து இலந்தை பழத்தையும் சேர்த்து அரைக்கவும். கொத்தமல்லி கழுவி துடைத்து தண்ணீர் இல்லாமல் வடித்து காயவிட்டு பொடியாக நறுக்கி அரைத்ததில் சேர்க்கவும். கடுகு உளுந்து கடலை பருப்பு தாளித்து சேர்த்து நன்கு கையில் கலக்கி விடவும். தாம்பாளத்தில் நிரப்பி வெய்யிலில் 2 நாட்கள் வைத்து காயவிடவும்.2 நாட்கள் கழித்து சிறியதாக தட்டி வடையாக காய வைக்கவும்.4 நாட்களில் ரெடி இலந்தை வடை.

முருங்கைக்காய் வடை

தேவையான பொருட்கள்:

முருங்கைக்காய் _ 2

சின்ன வெங்காயம் _10

கடலைப்பருப்பு _1 கப்

சீரகம் _1 டீஸ்பூன்

பெருஞ்சீரகம் _1 டீஸ்பூன்

இஞ்சி_ ஒரு துண்டு

கறிவேப்பிலை, கொத்தமல்லி _ சிறிதளவு

பூண்டு _2 பல்

பெருங்காயம் _சிறிது

உப்பு _தேவைக்கேற்ப

மிளகாய் _ 1

எண்ணெய் _பொரிப்பதற்கு தேவையானது

செய்முறை:

ஒரு கப் கடலைப்பருப்பை கழுவி தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவைக்கவும். முருங்கைக்காயை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி இட்லி குக்கரில் மிதமான தீயில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும். ஆறியவுடன் ஒரு சிறு கரண்டியைப் பயன்படுத்தி முருங்கைக்காய் தோலை அகற்றி உள்ளே இருக்கும் சதையோடு சேர்ந்த விதைகளை மட்டும் தனியாக எடுக்கவும்.

இதையும் படியுங்கள்:
இனிப்போ இனிப்பு ரெசிபிஸ் - ரோஸ் பாயாசம்; சர்க்கரை போண்டா
different and nutritious vadas!

ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த கடலைப் பருப்பு முருங்கைக்காய் விதை மற்றும் மேற்கூறிய அனைத்துப் பொருள்களையும் சேர்த்து மையாக தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும். அரைத்த விழுதுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறு உருண்டைகளாக எடுத்து வைக்கவும்.

பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் சூடுபடுத்தவும் எலுமிச்சை அளவு மாவை எடுத்து கையில் தட்டிக்கொண்டு எண்ணெயில் போட்டு இருபுறமும் வேகும்படி நன்றாகப் பொரித்து எடுக்கவும். சுவையான மற்றும் உடலுக்கு ஆரோக்கியமான முருங்கைக்காய் வடை தயார்.

Read Entire Article