விண்வெளிக்கு பகவத்கீதை கொண்டு சென்ற சுனிதா வில்லியம்ஸ்!.. அடடே இப்படி ஒரு காரணமா?

18 hours ago
ARTICLE AD BOX

விண்வெளிக்கு பகவத்கீதை கொண்டு சென்ற சுனிதா வில்லியம்ஸ்!.. அடடே இப்படி ஒரு காரணமா?

Chennai
oi-Pavithra Mani
Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச விண்வெளியில் ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்காக 9 நாள் பயணமாக விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த 9 மாதங்களாக பூமிக்குத் திரும்ப முடியாமல் உள்ளனர். இந்நிலையில், அவர்களை பூமிக்குத் திரும்பி அழைத்து வருவதற்காக டிராகன் விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ் சமோசா மற்றும் பகவத் கீதையை தன்னுடன் எடுத்துச் சென்றார். சமோசா, பகவத்கீதையை சுனிதா வில்லியம்ஸ் எடுத்துச் சென்றதற்கான சுவாரஸ்யமான காரணம் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக தெரிந்து கொள்ளலாம் வாங்க...

சர்வதேச விண்வெளி நிலையத்தை நாசா அமைத்துள்ளது. விண்வெளியில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதற்காக இந்த விண்வெளி நியைம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இந்த விண்வெளி நிலையத்திற்கு சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலமாக 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Sunitha Williams NASA

சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் ஒன்பது நாட்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொண்டுவிட்டு பூமிக்குத் திரும்பவிருந்தானர். ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவர்கள் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. கோளைறுகளை சரிசெய்ய முயன்றும் தோல்வியே ஏற்பட்டது. இதனால் கடந்த 9 மாதங்களாக விண்வெளி நிலையத்திலேயே அவர்கள் இருவரும் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

தற்போது அவர்களை பூமிக்கு அழைத்து வருவதற்காக ஸ்பேஸ் எக்ஸின் க்ரூ டிராகன் 9 என்ற விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த விண்கலம் கடந்த சனிக்கிழமை விண்வெளிக்கு புறப்பட்டது. இந்த டிராகன் விண்கலம் ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக விண்வெளி நிலையத்தைச் சென்றடைந்தது.

இந்த விண்கலனில்தான் சுனிதா மற்றும் வில்மோர் திரும்பவுள்ளனர். இன்று நள்ளிரவுக்கு மேல் டிராகன் விண்கலம் பூமியை வந்தடையும் என்று எதிர்பார்த்து வருகின்றனர். சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் விடுவிக்கப்படும் காட்சி, பூமிக்கு வந்து சேரும் காட்சிகளை நேரலையாக ஒளிபரப்ப நாசா ஏற்பாடு செய்துள்ளது.

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்குச் செல்லும்போது கடந்த காலத்தில் பகவத் கீதை மற்றும் சமோசாவை தன்னோடு எடுத்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் பெரும் விவாதப்பொருளாக மாறியது. அவர் விநாயகர் சிலையையும் தன்னுடன் கொண்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சுனிதா வில்லியம்ஸ் கூறுகையில், பகவத் கீதை மற்றும் சமோசா இவை இரண்டுமே என்னுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமானவை. எனது தந்தை எனக்கு அளித்த பரிசு பகவத் கீதை. பூமியில் உள்ள மனிதர்கள் போலவே விண்வெளியிலும் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்துவதற்கு இது உதவுகிறது என்று கூறியுள்ளார் சுனிதா வில்லியம்ஸ்.

More From
Prev
Next
English summary
Sunita Williams took Samosa and Bhagavad Gita with her when she went into space. In this collection, you can learn in detail about the interesting reason why Sunita Williams took samosa and Bhagavad Gita.
Read Entire Article