ARTICLE AD BOX
தமிழ்நாடு மின்சார வாரியம் பராமரிப்பு பணி காரணமாக இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை எற்படும் என்பதை பார்ப்போம்.

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.
இதையும் படிங்க: 10 மாவட்டங்களில் பட்டையை கிளப்பப்போகுதாம் கனமழை! சென்னையிலும் தரமான சம்பவம் இருக்காம்!

இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தெரிவிக்கப்படும். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் எந்தெந்த இடங்களில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.

கன்னியாகுமரி மாவட்டம்:-
கன்னியாகுமரி, தஞ்சாவூர் மாவட்டங்களின் சில பகுதிகளில் மட்டுமே மின் தடை சார்ந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் தக்கலை மார்க்கெட் ரோடு, அண்ணா சிலை, நகராட்சி அலுவலகம், கீழக்கல்குறிச்சி, பருத்தியரை, கொல்லன்விளை ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மக்களே தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்! சரசரவென விலை குறைந்தது! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?

தஞ்சாவூர் மாவட்டம்:-
திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளான திருக்காட்டுப்பள்ளி பேருந்து நிலையம், பூதலூர் ரோடு, சன்னதி தெரு, மேலவீதி, தெற்குவீதி தெரு, காந்திசிலை, மாதாகோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.