ARTICLE AD BOX
”காவிரி, முல்லைப் பெரியாறு என தமிழக விவசாயிகளுக்கு இழைக்கப்படும் துரோகத்தை நிறுத்தாமல், தமிழகத்தின் எல்லை மாவட்டங்களைக் கேரள மாநில மருத்துவக் கழிவுகளின் குப்பைக் கிடங்காக மாற்றுவதைத் தடுக்காமல், தொடர்ந்து தமிழகத்தை இந்தியா கூட்டணிக் கட்சியினர் வஞ்சித்துவருவதாகவும் அவர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்ததாகக் கூறி, அதற்கு கண்டனம் தெரிவிக்கும்படியாக பா.ஜ.க.வினர் கருப்புக்கொடி காட்டினர்.
மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க. தலைவர்கள், மற்ற நிர்வாகிகள் அவரவர் வீடுகளில் கருப்புக்கொடி ஏந்தியபடி நின்றனர்.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் தமிழிசை, மாநிலச் செயலாளர் சென்னை முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன் உட்பட பலரும் சென்னையில் கருப்புக்கொடி ஏந்தி எதிர்ப்பைத் தெரிவித்தனர்.