ARTICLE AD BOX
விஜய்யை எதிர்க்கும் வடிவேலு.. நன்றியே இல்ல.. பிரபலம் சொன்ன தகவல்!
சென்னை: விஜயகாந்தை எதிர்த்து கடுமையாக பிரச்சாரம் செய்த வடிவேலு. மீண்டும் திமுகவிற்கு ஆதரவாக பேசி உள்ளார்.சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக விஜய் போட்டியிட இருக்கும் நிலையில் வடிவேலு திமுகவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது புயலை கிளப்பி உள்ளது. இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் பயில்வான் ரங்கநாதன் பேசி உள்ளார்.
நகைச்சுவை நடிகரான வடிவேலு 2011 ஆம் ஆண்டு சட்டபேரவைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது, தேமுதிக தலைவர் விஜய்காந்திற்கும் தனக்கும் இருந்த பகையை வெளிப்படுத்தும் வகையில் அவரை கடுமையாக விமர்சித்து பேசி சிக்கலில் மாட்டினார். அதன் பின் சினிமா, அரசியலை விட்டு விலகி இருந்தார் வடிவேலு.

வடிவேலு: பல ஆண்டுகள் சினிமாவில் தலை காட்டாமல் இருந்த வடிவேலு, மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினின் மகனான நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு சினிமாவில் வலம் வரும் இவர், சென்னையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு பேசினார். அதில், வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக 200 தொகுதிகளுக்கு மேல் கைபற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்றார். சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக விஜய் போட்டியிட இருக்கும் நிலையில் வடிவேலு திமுகவுக்கு ஆதரவாக களமிறங்கி உள்ளது பெரும் புயலை கிளப்பி உள்ளது.

காணாமல் போனார்: இதுகுறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக அசிங்கமாக பேசுவதும், அருவருப்பாக பேசுவதும் எல்லாம் பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போன்றதாகும். ஏதாவது சர்ச்சையில் மாட்டினார் என்றால், புழல் ஜெயிலுக்கு செல்ல வேண்டியது தான். திறமை மீது நம்பிக்கை வைத்து அதன் மூலம் புகழ் பெற வேண்டுமே தவிர அடுத்தவர்களை விமர்சனம் செய்து அசிங்கப்படுத்தி, புகழ் பெறக்கூடாது. 2011 சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் பற்றி மட்டுமில்லை ஜெயலலிதாவை பற்றியும் அவதூறாக பேசினார். அதன் பிறகு தான் வடிவேலு சினிமாவை விட்டு காணாமல் போனார்.

கர்வம்,திமிரு: வடிவேலுக்கு வாழ்க்கை கொடுத்ததே விஜயகாந்த் மற்றும் கமலஹாசன் தான். அவர்கள் இருவரும் தான் மாறி மாறி அவருக்கு பட வாய்ப்பு கொடுத்தனர். சின்ன கவுண்டர் படத்தில் வடிவேலு வரும் கதாபாத்திரம் ரெண்டு காட்சியில் மட்டும் தான் இருந்தது. நம்ம ஊருக்காரர் என்பதற்காக, விஜயகாந்த், இயக்குனியரிடம் சொல்லி அந்த காட்சியை நீட்டிக்கசொன்னார். அதன் பின் படத்தில் பல இடங்களில் வடிவேலு வருவது போல காட்சி அமைக்கப்பட்டது. ஆனால் வடிவேலு பெரிய நடிகராக வளர்ந்த பிறகு கர்மமும், திமிரும் சேர்ந்து கொண்டதால் ஒரு கட்டத்தில் விஜயகாந்த் எதிர்த்து பேச ஆரம்பித்துவிட்டார். அது விஜயகாந்துக்கு பின்னடைவாக அமையவில்லை, அது வடிவேலுக்கு தான் பின்வடைவாக அமைந்து, பட வாய்ப்பு இல்லாமல் இருந்தார்.
தனிப்பட்ட விருப்பம்: மாமன்னன் திரைப்படத்தில் நடித்த வடிவேலு நகைச்சுவை நடிகராக நடிக்கவில்லை குணச்சித்திர நடிகராக நடித்திருக்கிறார், அதைத் தொடர்ந்து தான், இப்போது திமுக விழாவில் அவர் பேசி வருகிறார். விஜய் குறித்து அவர் பேசுவது அவருடைய தனிப்பட்ட விஷயம். வடிவேலு இனிமேல் சினிமாவில் நடித்து பணம் சம்பாதித்து அதில் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனால் அவர் விஜயை பற்றி பேசுவது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என்று பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார்.