ARTICLE AD BOX

தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் இவர்களுடைய ஆட்சிக்காலம் இன்னும் ஓராண்டில் நிறைவடைய உள்ளது. இதனை தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளுக்கும் போட்டியாக தற்போது நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ளார். தற்போது அவர் தன்னுடைய கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தத் திரைப்படத்தை முடித்த கையோடு முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். கடந்த வருடம் தன்னுடைய முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் மிகச் சிறப்பாக நடத்திய விஜய், ஆரம்பத்தில் இருந்தே திமுகவிற்கு எதிராக பல கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் விஜய்க்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்தாலும் சில இடங்களில் விஜய்க்கு சாதகமாக சீமான் பல கருத்துக்களை தெரிவித்து வருகின்றார். அதனால் ஒருவேளை சீமான் வருகின்ற சட்டசபை தேர்தலில் விஜயுடன் கைகோர்ப்பாரா என்ற கேள்வி உள்ளது. இப்படியான நிலையில் நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், திராவிடம் பேசாமல், பெரியாரைப் பேசாமல் நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இன்று வளர்ந்து நிற்கிறது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த பெரிய பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்த போது நான் செல்லவில்லை. எனவே தமிழக வெற்றிக்கழகம் கட்சியுடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைப்பது சரியாக வராது என்று சீமான் தெரிவித்துள்ளார்.