ARTICLE AD BOX
விஜய்யின் படத்தை பயந்துகொண்டே ரிலீஸ் செய்தோம்.. இயக்குநர் ஓபன் டாக்
சென்னை: நடிகர் விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். கடந்த வருடம் விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது. அரசியலில் களமிறங்கியிருப்பதால் சினிமாவுக்கு முழுக்கு போடும் அவர்; இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படம்தான் விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில் விஜய் குறித்து பிரபல இயக்குநர் விக்ரமன் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது.
விஜய்யின் நடிப்பில் கடைசியாக GOAT திரைப்படம் வெளியானது. அந்தத் திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. அடுத்ததாக ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்துவருகிறார். பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும், பாபி தியோல் வில்லனாகவும் கமிட்டாகியிருக்கிறார்கள். குறிப்பாக விஜய்யின் கரியரில் அவருக்கு இதுதான் கடைசி படம் என தெரிவித்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டாகியிருக்கின்றனர்.

விஜய்யின் அரசியல்: விஜய் இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைதொடங்கியிருக்கிறார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அக்கட்சி போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதில் போட்டியிடவில்லை. அதேசமயம் தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக போட்டியிடவிருக்கிறது. எப்படியாது தமிழ்நாடு அரசியலில் விஜய்யின் வீரியத்தை வளர்த்துவிட வேண்டுமென்பதில் அவரது தொண்டர்கள் குறியாக இருக்கிறார்கள்.
ஜன நாயகன் படத்தில் விஜய் பிஸி: அக்கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த வருடம் விக்கிரவாண்டியில் நடந்தது. இதில் மொத்தம் 8 லட்சம் பேர் கலந்துகொண்டார்கள் என்றும்; 80 கோடி ரூபாய்வரை விஜய் இம்மாநாட்டுக்காக செலவு செய்தார் என்றும் சொல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசியல் மேடைகளில் அடிக்கடி தோன்றி திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார்.மேலும் இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்துவரும் படத்துக்கு ஜன நாயகன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.

பூவே உனக்காக: விஜய் இதுவரை ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் அவருக்கு முதல் ஹிட் படம் என்றால் அது பூவே உனக்காக திரைப்படம்தான். அந்தப் படத்தை விக்ரமன் இயக்கியிருந்தார். பூவே உனக்காக படத்துக்கு பிறகுதான் விஜய்க்கு பெரிய அடையாளமும், வெளிச்சமும் கிடைத்தது. இந்நிலையில் விஜய் குறித்து இயக்குநர் விக்ரமன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், "பூவே உனக்காக திரைப்படத்தை நாங்கள் இறுதி செய்த ரிலீஸ் தேதிக்கு ஒரு நாள் முன்னரே மதுரையில் ரிலீஸ் செய்தோம். அங்கு வியாழக்கிழமை ரிலீஸ் செய்தால்தான் திரையரங்குகள் கிடைக்கும் என்ற நிலைமை அன்று இருந்தது.
ஆமிர் கானுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன லோகேஷ் கனகராஜ்.. கூலியில் செம கெத்தா இருக்காரே
ஹவுஸ் ஃபுல்: அந்த சமயத்தில் ராமராஜனின் படத்தை அவர்கள் திரையிடுவதாக இருந்தார்கள். அப்போது அவர் உச்சத்தில் இருந்தார். ஒரு நாள் முன்னரே படத்தை ரிலீஸ் செய்து மதுரையில் ரிசல்ட் சரியாக இல்லையென்றால் படத்தை யாரும் பிரிண்ட்டே எடுக்கமாட்டார்கள். எந்த ஊரிலும் ரிலீஸாகாது என்று பயமுறுத்தினார்கள். ஆனால் எங்களுக்கு படத்தின் மீது பெரிய நம்பிக்கை இருந்தது. அதன் காரணமாக தைரியமாக நாங்கள் படத்தை மதுரையில் ஒரு நாள் முன்னதாகவே ரிலீஸ் செய்தோம்.
எல்லா ஊரிலும் சூப்பர் ஹிட்: நாங்கள் எதிர்பார்த்தபடியே மதுரையில் படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துவிட்டது. தியேட்டர் ஹவுஸ் ஃபுல் ஆகிவிட்டது. முக்கியமாக படத்தின் க்ளைமேக்ஸ் அருமையாக இருப்பதாகவும் சொன்னார்கள். பலரும் எழுந்து நின்று கைத்தட்டி இருக்கிறார்கள். அதற்கு பிறகு சென்னை, கோவை, திருச்சி என்று பல ஊர்களில் ரிலீஸாகி 275 நாட்கள்வரை அந்தப் படம் ஓடியது" என்றார்.