ARTICLE AD BOX
விஜய் பட நடிகை கணவரை பிரிவதாக அறிவித்தார்.. இப்போ தானே கல்யாணம் ஆச்சு.. ரசிகர்கள் கவலை!
சென்னை: தளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த பைரவா படத்தில் முக்கிய ரோலில் நடித்த நடிகை தனது கணவரை பிரிவதாக அறிவித்துள்ளார். நீண்ட யோசனைக்குப் பிறகு நான் என் திருமணப் பந்தத்தை முடித்துக் கொள்ளும் முடிவை எடுத்திருக்கிறேன் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். திருமணமாகி 2 வருடம் காதல் கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளது, அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மலையாள நடிகையான அபர்ணா வினோத், 2015ம் ஆண்டு வெளியான ஆசிப் அலி மற்றும் இந்திரஜித் சுகுமாரன் நடித்த மலையாளத் திரைப்படமான கோஹினூர் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து, தளபதி விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்து 2017ம் ஆண்டு வெளியான பைரவா படத்தில் கீர்த்தி சுரேஷின் தோழியாக நடித்திருந்தார். அந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் பேசும்படியாக இருந்தது. இதைத்தொடர்ந்து பரத் நடித்த நடுவன் படத்தில் நாயகியாக நடித்தார்.
தமிழ், மலையாளம் என அடுத்தடுத்த படத்தில் நடித்து வரும் ரில்ராஜ் பிகே காதலித்து வந்தார்.இதையடுத்து 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 2023 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காதல் தினத்தில், அபர்ணாவும் ரில்ராஜும் திருமணம் செய்து கொண்டனர். நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், அபர்ணா வினோத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவரை பிரிந்து வாழ முடிவு செய்து இருப்பதாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நண்பர்களே மற்றும் பின்தொடர்பவர்களே, நான், வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான ஒரு முடிவை எடுத்தள்ளேன் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீண்ட யோசனைக்குப் பிறகு, என் திருமண வாழ்க்கையை முடிக்க முடிவு செய்திருக்கிறேன். இது எளிதான முடிவு இல்லை. ஆனால், வளர்ச்சிக்கும், என் காயங்களில் இருந்து குணமாவதற்கும் இது சரியானதாக இருக்கும் என்றும் நம்புகிறேன்.
27 வயதில், என் திருமணம் வாழ்க்கை உணர்ச்சி ரீதியாக, கடினமாக இருந்தது, எனவே முன்னேறுவதற்காக அந்த அத்தியாயத்தை முடிக்கிறேன். உங்களிடம் இருந்த எனக்கு கிடைத்த அன்பு மற்றும் ஆதரவிற்கு நான் என்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன். மேலும் தெரியாதவர்களை நம்பிக்கையுடனும் நேர்மறையுடனும் அரவணைக்க காத்திருக்கிறேன் என்று தனது உருக்கமாக பதிவிட்டுள்ளார். அபர்ணாவின் இந்த பதிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேலும், பலர் இது தவறான முடிவு என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
மலையான நடிகையான அபர்ணா வினோத், கொடகராவில் உள்ள சஹ்ரதயா உயர்நிலைக் கல்லூரியில் உளவியலில் பிஎஸ்சி பட்டம் பெற்றார், பின் சென்னை பிரசிடென்சி கல்லூரியில் அதே துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.