ARTICLE AD BOX
80களில் எல்லாம் சினிமா ஹீரோன்னா சுருட்டை முடி இருக்கணும். கொஞ்சம் பெண்தன்மை இருக்கணும். அப்படி இருந்தால் தான் கோடம்பாக்கத்துக்கு உள்ளேயே போக முடியும்.
ஆனா இந்த சினிமா இலக்கணத்தை உடைத்தவர் யாரு? எம்ஜிஆருக்கும், விஜயகாந்துக்கும் எந்த விஷயத்துல பெரிய வித்தியாசம்னு பிரபல சினிமா விமர்சகர் டாக்டர் காந்தாராஜ் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். வாங்க பார்க்கலாம்.
இலக்கணத்தை உடைத்தவர்: ஆனா இந்த சினிமா இலக்கணத்தை உடைச்சிக்கிட்டு வந்தவரு ரஜினிதான். அவரு பெரிய ஆளா ஆகிட்டாரு. அவருக்கு ஈக்குவலா இன்னொருத்தர் வேணும்னு நினைச்சப்ப தான் விஜயகாந்த் வந்தாரு.
அப்புறம் அவரும் வளர்ந்து அரசியலுக்கு எல்லாம் போயிட்டாரு. விஜயகாந்த் வந்து எம்ஜிஆர் டெக்னிகலதான் அவரும் யூஸ் பண்ணினாரு. தானம் கொடுக்குறது, ஏழைகளுக்கு சாப்பாடு கொடுப்பது. ஆனா எம்ஜிஆர் அளவுக்கு விளம்பரம் படுத்திக்கல
எம்ஜிஆர்: அவரு ரோட்ல கார்ல போய்க்கிட்டு இருப்பாரு. அப்போ போற கிழவிகளைப் பார்த்ததும் வண்டியில இருந்து இறங்கி அவங்க கையில 100 ரூபா கொடுப்பாரு. மறுநாள் ஏழைத்தாய்க்கு உதவிய எம்ஜிஆர்னு போட்டுருவாங்க.
அது எந்தளவுக்குப் போச்சுன்னு தெரியும். யாரு கொடுத்தாலும் எம்ஜிஆர் கொடுத்ததுன்னு சொல்வாங்க. அந்தளவுக்கு பப்ளிசிட்டியா போயிடுச்சு. அதுமாதிரி எல்லாம் விஜயகாந்துக்கு இல்ல. அவருக்கு ரெண்டு பின்னணி. ஒண்ணு நடிகர் என்ற பின்னணி. இன்னொன்னு அவரோட நாயுடு ஜாதி பின்னணி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கருப்பு எம்ஜிஆர்: விஜயகாந்தை தமிழ்த்திரை உலகில் கேப்டன், புரட்சிக்கலைஞர், கருப்பு எம்ஜிஆர்னு சொல்வாங்க. அவருக்கு மக்கள் மத்தியில் அந்தளவுக்கு ஒரு கிரேஸ் வர காரணம் என்னன்னா யாராக இருந்தாலும் உதவி என்று வந்து நின்றால் தயங்காமல் செய்வார். அவர் நடிகர் சங்கத்தின் கடனையே அடைக்க அந்தளவு முயற்சி செய்தார்.
அது யாரும் செய்யாத ஒரு விஷயம். சக நடிகர், நடிகைகள், நலிந்த கலைஞர்களுக்கு தேடிப்பிடித்து உதவக்கூடியவர். அவர் வெளியில் தெரியாமல் பல விஷயங்களைச் செய்துள்ளார். இன்னும் அவரது அலுவலகத்தில் உள்ள மண்டபத்தில் தினமும் அன்னதானம் நடந்தவண்ணம் இருக்கிறது. அதனால்தான் அவர் மறைந்தாலும் நாம் இன்னும் அவரை நினைத்துப் பேசிக்கொண்டு இருக்கிறோம்.