ARTICLE AD BOX
பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் கடந்த 8 சீசன்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிலையில், தற்போது அந்நிகழ்ச்சி வேறு சேனலுக்கு மாறி இருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியின் முதல் சீசனே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால் தொடர்ந்து ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை வெற்றிகரமாக 8 சீசன்கள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. இதில் முதல் 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், அண்மையில் நிறைவடைந்த 8வது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி இருந்தார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் முத்துக்குமரன் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். இந்த சீசனோடு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி நிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் நடத்தப்பட்டாலும் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகாது என்றே கூறப்படுகிறது. ஏனெனில் அண்மையில் விஜய் டிவியை அம்பானியின் ஜியோ நிறுவனம் வாங்கியது. இதனால் ஹாட்ஸ்டார் ஓடிடி தளம் ஜியோ ஹாட்ஸ்டார் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள்... பிக் பாஸ் சீசன் 8ன் ரெளடி பேபி! இந்த க்யூட் குழந்தை யாருன்னு தெரியுதா?

ஏற்கனவே அம்பானிக்கு சொந்தமாக கலர்ஸ் என்கிற சேனல் உள்ள நிலையில், தற்போது விஜய் டிவியையும் அந்நிறுவனம் வாங்கி உள்ளதால், விஜய் டிவியில் உள்ள பெரும்பாலான படங்கள் இனி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளன. அதே போல் கலர்ஸ் தமிழ் கைவசம் இருந்த கேஜிஎப் போன்ற திரைப்படங்கள் விஜய் டிவியிலும் ஒளிபரப்பாகும். இப்படி படங்கள் மட்டுமின்றி விஜய் டிவி நிகழ்ச்சிகளும் இனி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளன.

அந்த வகையில் அண்மையில் நிறைவடைந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி வருகிற பிப்ரவரி 23ந் தேதியில் இருந்து தினசரி இரவு 7 மணிக்கு பிக் பாஸ் 8 நிகழ்ச்சி மறு ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. அநேகமாக பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியும் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் டிவியில் தான் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... கமலை ஓவர்டேக் செய்த விஜய் சேதுபதி; டிஆர்பி-யில் சாதனை படைத்த பிக் பாஸ் 8 பைனல்