விஜய் டிவி சீரியல் ஹீரோயின் வாழ்க்கையில் 9 வயதில் நடந்த கொடூரம்; நெஞ்சை பதற வைக்கும் உண்மை!

3 days ago
ARTICLE AD BOX

சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலமான, நேஹா கௌடா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கொடுமையான சம்பவம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
 

சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல் நடிகை

சன் டிவியில் கல்யாண பரிசு சீரியல் மூலமாக கதாநாயகியாக அறிமுகமான நேஹா கௌடா, விஜய் டிவியிலும் கடந்த 2022-ஆம் ஆண்டு முடிவடைந்த பாவம் கணேசன் தொடரில் நடித்திருந்தார். அடுத்தடுத்து ஹிட் சீரியல்களில் நடித்ததால், இவர் தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இதுமட்டும் இன்றி, கன்னடத்திலும் பல சீரியல்களில் நேஹா கௌடா நடித்துள்ளார்.
 

2018ல் சந்தன் கௌடா என்பவரை திருமணம் செய்துகொண்ட நேஹாவுக்கு, திருமணத்திற்கு 6 வருடங்களுக்கு பிறகு பெண் குழந்தை கடந்த ஆண்டு பிறந்தது. குழந்தை பிறந்துள்ளதால் நடிப்பில் இருந்து விலகியே இருக்கும் இவர் குழந்தை மற்றும் குடும்பத்திற்காக செலவிட்டு வருகிறார். இந்நிலையில் , நேஹா கௌடா ராஜேஷ் கௌடா அவர்களின் யூடியூப் சேனலில் தனது வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களைப் பற்றி பேசியுள்ளார்.


 

குறிப்பாக பல பெண்கள் குழந்தை பருவத்தில் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி பேசியுள்ளார்.  நடிகை நேஹா தனது வாழ்க்கையில் நடந்த அந்த கசப்பான சம்பவத்தை நினைவு கூர்ந்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், "இன்றும் கூட காம கொடூரர்களால் எத்தனையோ சிறுமிகளுக்கு மோசமான சம்பவங்கள் நடக்கிறது. பல நேரங்களில் அந்த குழந்தைகளுக்கு தங்களுக்கு என்ன நடந்தது என்பதே தெரிவதில்லை. 

விஜய் டிவி சீரியல் நடிகை நேகா கவுடாவுக்கு நடந்த வளைகாப்பு! குவிந்த பிரபலங்கள்!
 

இன்னும் சில குழந்தைகள் பயந்து வீட்டில் சொல்ல மாட்டார்கள். சில நேரங்களில் தெரிந்தாலும் அந்த பெண்ணின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதை ரகசியமாக வைக்கிறார்கள். பெற்றோர்களே அதை வெளியே சொல்லாமல் அந்த விஷயத்தை அங்கேயே மூட பார்க்கிறார்கள். இதனாலேயே இதுபோன்ற கொடூரர்கள் எந்த பயமும் இல்லாமல் மேலும் பல குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கிறார்கள். நம் சட்ட அமைப்பிலும் இதுபோன்ற குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை கிடைக்காதது வருத்தமளிக்கிறது என பேசியுள்ளார். 
 

முதல் முறையாக பகிர்ந்த நேஹா கௌடா

தனது வாழ்க்கையில் நடந்த இந்த சம்பவம் பற்றி நடிகை நேஹா பேசும் போது... இதைப்பற்றி இதற்கு முன்பு நான் எங்கும் பேசியதில்லை. "நான் நான்காவது படிக்கும்போது நடந்த சம்பவம்அது. அன்று என் அம்மா வீட்டில் இல்லை. என்னை தூங்க வைத்துவிட்டு வெளியில் போய் இருந்தார். பாட்டி தான் இருந்தாங்க. நான் கண் விழித்தபோது அம்மா இல்லை. அவங்களை தேடி வெளியே போயிட்டேன். பக்கத்து தெருவில் ஒருத்தன் உங்க அப்பா எனக்கு தெரியும் என்றான். பின்னர் வா உனக்கு வாட்ச் வாங்கி தரேன் என்றான். 

வாட்ச் கடையில் நடந்த கொடூரம்

நான் முதலில் நம்பவில்லை, என் அப்பாவின் பெயர் என்ன என்று கேட்டேன். அவன் ஏதோ தடுமாறினான். ஆனால் அந்த நேரத்தில் ராமகிருஷ்ணாவை தெரியுமா என்று கேட்டேன்? அவன் ஆமாம் ஆமாம் அவரை நல்லாவே தெரியும் என்றான். அவனுக்கு என் அப்பா பத்தி தெரியும் என்று நினைத்துக்கொண்டு அவன் பின்னாடி போனேன்.

எங்கெல்லாமோ கூட்டிட்டு போனான், ஒரு வாட்ச் கடைக்கு போய் அங்க கதவை சாத்தினான். ரொம்ப மோசமா நடக்க ஆரம்பிச்சான். அந்த நேரத்தில் எனக்கு என்ன நடக்குதுன்னே தெரியாம பயங்கரமா அழ ஆரம்பிச்சிட்டேன். கத்தியை காட்டி அழாதேன்னு சொன்னான். நல்லா அடிச்சான். அப்புறம் எப்படியோ அவன்கிட்ட இருந்து தப்பிச்சிட்டு தப்பிச்சு வெளியில வந்தேன். 

 

எங்க ஓடி வந்தேன்னு தெரியல. அதுக்குள்ள எங்க வீட்ல எல்லாரும் என்னை தேடிட்டு இருந்தாங்க. நான் அழுவதை பார்த்து அங்க இருந்தவங்க அப்பா பெயர் என்னனு கேட்டாங்க. ஆனா ஷாக்ல இருந்த எனக்கு யார் பெயரும் ஞாபகத்துக்கு வரல. கடைசியா என் சொந்தக்காரர் ஒருத்தர் என்னை பார்த்து வீட்டுக்கு கூட்டிட்டு போனார் என்று அந்த சம்பவத்தை நேஹா கூறினார்.

வீட்ல அவன் அடிச்சத சொன்னேனே தவிர வேற எதுவும் சொல்லல. ஏன்னா எனக்கு அங்கு என்ன நடந்துச்சுன்னே தெரியல. சில வருஷம் கழிச்சு டீச்சர் ஒருத்தர் குட் டச், பேட் டச் பத்தி சொல்லும் போதுதான் எனக்கு தெரிஞ்சது. எனக்கும் இதே மாதிரி நடந்துச்சுன்னு. அங்கேயே பயங்கரமா அழுதுட்டேன். அப்போ அந்த டீச்சருக்கு சந்தேகம் வந்து என்னை சமாதானப்படுத்தி, ஒன்னும் நடக்கலன்னு, என் மனசுல இருந்த பயத்தை வெளியில எடுத்தாங்க. அதுக்கப்புறம் என் அப்பா அம்மாவுக்கு விஷயம் தெரிஞ்சது. என் அப்பா ரொம்ப நல்லா சிச்சுவேஷன ஹேண்டில் பண்ணி எனக்கு தைரியம் சொன்னாரு. அந்த கசப்பான நாளை நினைச்சாலே இன்னும் பயமா இருக்கு என்கிறார் நேஹா. 
 

Read Entire Article