விஜய் சேதுபதியின் புதிய படத்தில் இணையும் சந்தோஷ் நாராயணன்…. எந்த படத்தில் தெரியுமா?

23 hours ago
ARTICLE AD BOX

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், விஜய் சேதுபதியின் புதிய படத்தில் இசையமைப்பாளராக இணைகிறார் என தகவல் கசிந்துள்ளது.விஜய் சேதுபதியின் புதிய படத்தில் இணையும் சந்தோஷ் நாராயணன்.... எந்த படத்தில் தெரியுமா?

விஜய் சேதுபதி கடைசியாக விடுதலை 2 திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் ட்ரெயின், காந்தி டாக்ஸ், ஏஸ் போன்ற படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார். அடுத்தது இவர், அட்லீ தயாரிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் கடைக்குட்டி சிங்கம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. இந்த படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடிக்க அவருடன் இணைந்து நடிகை நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்தது இந்த படத்தை 2025 கோடையில் திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு வருகிறது. விஜய் சேதுபதியின் புதிய படத்தில் இணையும் சந்தோஷ் நாராயணன்.... எந்த படத்தில் தெரியுமா?இந்நிலையில் இந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக இணைகிறார் என புதிய தகவல் வெளிவந்துள்ளது. மேலும் சந்தோஷ் நாராயணன், பாண்டியராஜுடன் கூட்டணி அமைப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் இனிவரும் நாட்களில் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read Entire Article