ARTICLE AD BOX
Most Expensive Player of ICC Champions Trophy 2025 : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் மிகவும் விலையுயர்ந்த வீரராக பாகிஸ்தானின் இமாம் உல் ஹக் கருதப்படுகிறார். அவருக்கு பாகிஸ்தான் வாரியம் ஒரு ரன்னுக்கு ரூ.3 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

Most Expensive Player of ICC Champions Trophy 2025 : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், பங்கேற்ற 8 அணிகளில் ஏ பிரிவில் இடம் பெற்ற பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் தொடரிலிருந்து வெளியேறிவிட்டன. இதில் என்ன ஆச்சரியம் என்றால் ஐசிசி சாம்பியன் டிராபி தொடரை நடத்தும் பாகிஸ்தான் விளையாடிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்த நிலையில் ஒரு போட்டி டாஸ் கூட போட முடியாத நிலையில் மழையால் ரத்து செய்யப்பட்டது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதே போன் தான் பி பிரிவில் இடம் பெற்ற இங்கிலாந்து 2 போட்டியிலும் தோல்வி அடைந்து வெளியேறிவிட்டது. இன்று ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான முக்கியமான போட்டி நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும், தோல்வி அடையும் அணி வெளியேறும்.

உலகின் சிறந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடி வரும் இந்த தொடரில் மிகவும் விலையுயர்ந்த வீரராக பாகிஸ்தானின் இமாம் உல் ஹக் கருதப்படுகிறார். கடந்த 23 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து வெளியேறியது.

இந்தப் போட்டிக்கு முன்னதாக, காயம் காரணமாக வெளியேறிய ஃபகர் ஜமானுக்கு பதிலாக இமாம் உல் ஹக் இடம் பெற்றார். இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இடம் பெற்று விளையாடி 10 ரன் எடுத்து ரன் அவுட்டில் ஆட்டமிழந்து வெளியேறினார். இப்போது இவர் தான் மிகவும் விலையுயர்ந்த வீரராக கருதப்படுகிறார். இந்தப் போட்டியில் 6 ரன்னுக்கு ஆட்டமிழந்த இமாம் உல் ஹக்கிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு ரன்னுக்கு ரூ.3 லட்சம் வீதம் ரூ.30,00,000 சம்பளமாக கொடுத்துள்ளது.

பாபர் அசாம் 2 போட்டிகளில் விளையாடி 87 ரன்கள் (64, 23) எடுத்தார். இதில் அவர் எடுத்த ஒவ்வொரு ரன்னுக்கு ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாகவே சம்பாதித்துள்ளார். இதே போன்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 2 போட்டிகளில் விளையாடி 61 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலமாக ஒரு ரன்னுக்கு ரூ. 19,672 வீதம் அவருக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இது தவிர பிசிசிஐ ஒப்பந்தம் மூலமாக ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு ரோகித் சர்மாவிற்கு ரூ.6 லட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. 2 போட்டிகளில் விளையாடிய நிலையில் ரூ.12 லட்சம் பெற்றுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 2 போட்டிகளில் விளையாடி 122 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலமாக ஒரு ரன்னுக்கு ரூ.9,806க்கு மேல் சம்பாதித்துள்ளார். பிசிசிஐ ஒப்பந்தம் மூலமாக ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சம் சம்பளம் பெறும் நிலையில் 2 போட்டிகளில் விளையாடியதால் சம்பளமாக ரூ.12 லட்சம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.