விஜய் சேதுபதிக்கு இன்ப அதிர்ச்சி அளித்த விஜே விஷால்!

3 hours ago
ARTICLE AD BOX

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றிருந்த விஜே விஷால், நடிகர் விஜய் சேதுபதியை நேரில் சென்று சந்தித்தார்.

எதிர்காலத் திட்டங்கள் குறித்து விஜய் சேதுபதி உரையாடியதாக அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை விஜே விஷால் பகிர்ந்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி முதல்முறையாகத் தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் விஜே விஷால் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். முதலிடத்தை முத்துக்குமரனும், இரண்டாவது இடத்தை செளந்தர்யாவும் பிடித்திருந்தனர்.

சின்ன திரையில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதன் மூலம் தனது பயணத்தைத் தொடங்கியவர் விஜே விஷால். அதில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தனது நடிப்புத் திறமையை பாக்கியலட்சுமி தொடரில் நிரூபித்தார்.

இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், பங்கேற்றதன் மூலம் தனது நகைச்சுவை திறனையும் வெளிப்படுத்தினார். அதன் விளைவாக அது இது எது மற்றும் கலக்கல் சாம்பியன்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளில் உதவி இயக்குநராகவும் இருந்து கற்றுத் தேர்ந்தார்.

விஜய் தொலைக்காட்சியில் பல பிரிவுகளில் பணியாற்றிய விஜே விஷால், ரெடி ஸ்டெடி போ என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். இதன்மூலம் பார்வையாளர்களையும் போட்டியாளர்களையும் பொழுதுபோக்கு அம்சம் நிறைந்தவர்களாக மாற்றினார்.

இவ்வாறு பலதளங்களில் அறியப்படும் விஜே விஷால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பலரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார்.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்ற தயாரிப்பாளர் ரவீந்திரன், விஜே விஷால் நிச்சயம் நாயகனாக நடிப்பான் என்றும், அவன் நடிக்கும் படத்தை வாங்கி நான் விநியோகம் செய்வேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

விஜே விஷாலும் விஜய் சேதுபதியும்

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு விஜே விஷால், அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதியை நேரில் சென்று சந்தித்தார். இது தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள விஜே விஷால்,

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் வார்த்தைகள் சக நடிகர்கள் மீதான அன்பு மற்றும் அக்கறையை வெளிப்படுத்துவதாகப் பதிவிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | சின்ன திரையில் சிறந்த நடிகை யார்?

Read Entire Article