129 கிலோ எடையிருந்த சுஷ்மிதா.. ஒரே ஆண்டில் 50 கிலோ குறைத்தது எப்படி.. உணவு விவரங்கள்

3 hours ago
ARTICLE AD BOX

129 கிலோ எடையிருந்த சுஷ்மிதா.. ஒரே ஆண்டில் 50 கிலோ குறைத்தது எப்படி.. உணவு விவரங்கள்

Chennai
oi-Velmurugan P
Subscribe to Oneindia Tamil

சென்னை: 2023 ஆம் ஆண்டின் இறுதியில் சுஷ்மிதா என்பவர் 129கிலோ எடையுடன் இருந்துள்ளார். அவர் வெறும் ஒரு வருடத்தில் 50 கிலோ எடை குறைந்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அவர் தனது படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்துள்ளார். அத்துடன் எடையை குறைக்க பின்பற்றிய உணவு பழக்க வழக்கங்கள் பற்றியும் கூறியுள்ளார். அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

இன்றைக்கு எடையை குறைப்பது என்பது பலருக்கும் சவாலான ஒன்றாக இருக்கிறது. இரவில் சாப்பிட்ட பிரியாணியால் வயிறு புடைத்து போய் தூங்கும் பலர் வாக்கிங் செல்கிறார்கள்.அப்படி வாக்கிங் செல்லும் போது, காபி, வடை என்று சிலர் சாப்பிடுகிறார்கள்.இதனால் என்னதான் எடை குறைப்பு முயற்சியில் இறங்கினாலும் உடல் எடை அவர்களுக்கு குறைவதே இல்லை. இதேபோல் டீ, காபி அதிக அளவில் சாப்பிட்டு விட்டு உடல் எடை குறைக்க முடியாமல் தவித்து வருகிறார்கள்.சிலர் இரண்டு நாள் வீரவேஷத்துடன் ஜிம்மிற்கு செல்வார்கள்..3 வது நாள் போகமாட்டார்கள்.. சிலர் இரண்டு நாள் வாக்கிங் செல்வார்கள்.. மூன்றாவது நாள் வாக்கிங் செல்ல மாட்டார்கள்.. இதனால் எடை குறைப்பு என்பது கனவாகி விடும்.

Chennai food diet

ஆனால் ஒரு சிலர் தீவிரமாக முயற்சி செய்து எடை குறைப்பார்கள். அப்படி குறைத்தவர் தான் அழகுக்கலை நிபுணர் சுஷ்மிதா.. 2023 ஆம் ஆண்டின் இறுதியில், சுஷ்மிதா கௌதம் 129 கிலோ எடைடையுடன் காணப்பட்டார். 2023ம் ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, சுஷ்மிதார் பலமுறை எடையைக் குறைக்க முயற்சித்துள்ளார். ஆனால் இறுதி வரை திடமாக இல்லை.. இதனால் எடையை குறைத்தாலும் மீண்டும் அவருக்கு எடை கூடிவிடும்.

இந்நிலையில் சுஷ்மிதா அதிரடியாக கட்டுப்பாட்டுடன் இருந்தார். இதன் காரணமாக ஒரே ஆண்டில் 50 கிலோ எடையை குறைத்து அசத்தியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எடை குறைந்ததன் ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன், தனது படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து கொண்டார். முன்னதாக சுஷ்மிதாவிற்கு மன அழுத்தம் காரணமாக அதிகமாக சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளதாம். ஆனால் எடையை குறைக்க எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக ஒரு வருடத்தில் 50 கிலோ அளவிற்கு எடையை சுஷ்மிதா குறைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

திருமணத்திற்கு முன் நிச்சயதார்த்தத்தின் போது, மிகவும் அதிக எடையுடன் இருந்ததை சுஷ்மிதா பகிர்ந்துள்ளார். அப்படி பகிர்ந்த போது, சுஷ்மிதாவின் வருங்கால கணவரிடன் உங்கள் மனைவியை எடையை குறைக்க வைக்க முயற்சிசெய்யுங்கள் என்று கிண்டலாக கூறியள்ளார்கள். கொழுப்பு அதிகமாக இருப்பதாகக் கருத்து தெரிவித்துள்ளார்கள். ஆனாலும் சுஷ்மிதாவை ஊக்கப்படுத்தி உள்ளார் அவரது வருங்கால கணவர். வருங்கால கணவரின் ஊக்கம் காரணமாக திருமண தேதிக்கு முன்பே மிகப்பெரிய அளவில் எடையை குறைத்துள்ளார்.

எடை இழக்க சுஷ்மிதா பயன்படுத்தி உணவுகளை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவர் தனது தினசரி உணவில் நிறைய பன்னீரைச் சேர்த்து, வீட்டில் சமைத்த உணவை சாப்பிடுவதில் கவனம் செலுத்தி வந்துள்ளார். அவர் சாப்பிட்ட சில உணவுகள் இங்கே:
1. பாலக் சூப்
2. காலிஃபிளவர் மற்றும் பன்னீர் சப்ஜி
3. தஹி தட்கா
4. பன்னீர் மற்றும் கேப்சிகம்
5. பன்னீர் டிக்கா மசாலா
6. கத்திரிக்காய் பீட்சா
7. காய்கறிகளுடன் துருவிய பன்னீர் ரொட்டி
8. மலாய் பியாஸ் பன்னீர்

எடை இழப்புக்குப் பிறகு சுஷ்மிதாவிற்கு பிசிஓடி, தைராய்டு, கர்ப்பப்பை வாய் (கழுத்து/முதுகெலும்பு வலி), சுவாசக் கஷ்டங்கள் மற்றும் நிறமி உள்ளிட்ட அவரது பல மருத்துவப் பிரச்சினைகளில் இருந்து தப்பி வந்துள்ளார். து எடை இழப்புக்காக செய்த முயற்சிகளை திரும்பி பார்க்கும் சுஷ்மிதா, கஷ்டப்பட்டதற்கு பலன் கிடைத்திருப்பதாக மகிழ்ச்சியடைந்துள்ளார். ஆரோக்கியமான எடை இழப்பை அடைய விரும்பும் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக சுஷ்மிதா சென் முன்மாதிரியாக இருக்கிறார்..

More From
Prev
Next
English summary
At the end of 2023, Sushmita weighed 129 kg. She has lost 50 kg in just one year. On her Instagram page, she shares her pictures and videos. She also talks about the diet she followed to lose weight. Many people are praising her.
Read Entire Article