ARTICLE AD BOX
Baba Bhaskar About Vijay In Jana Nayagan : நடிகர் விஜய் தனது கடைசி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் குறித்த சில தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. அந்த வகையில், அதில் நடித்த பாபா பாஸ்கர் தற்போது ஒரு ஊடகத்திற்கு ஒரு பேட்டியை அளித்துள்ளார். அதில் அவர் விஜய் குறித்து பேசிய விவகாரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜனநாயகன் திரைப்படம்:
அடுத்த வருடம் முழு நேரமாக அரசியலில் களமிறங்க இருக்கும் நடிகர் விஜய், தற்போது கடைசியாக தனது 69 ஆவது படத்தில் நடித்து வருகிறார். H. வினோத் இயக்கும் இந்த திரைப்படம் ஒரு பொலிட்டிக்கல் திரில்லர் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னை மற்றும் அதை சுற்றி இருக்கும் இடங்களில் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முக்கிய பாகமாக இருப்பவர், பாபா பாஸ்கர். இவர் விஜய் குறித்து ஒரு ஊடகத்திற்கு அழைத்துள்ள பேட்டி தற்போதுநேரத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் குறித்து பேசிய பாபா பாஸ்கர்..
விஜய்யை சிறந்த மனிதர் என்று புகழ்ந்த பாபா பாஸ்கர், தன் அருகில் இருக்கும் அனைவரையும் வளர்த்து விடும் எண்ணம் அவருக்கு இருப்பதாக கூறியிருக்கிறார். அவர், சீக்ரெட் ஆக பலரை வளர்த்து விடுவதாகவும், திறமைகள் கொண்ட இளம் தலைமுறைகளை தட்டிக் கொடுக்க தளபதியைப் போல வேறு யாரும் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த குணம், விஜய்யை தாண்டி நடிகர் சிம்புவிற்கும் இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
ஜன நாயகன் படத்தில் பாபா பாஸ்கர்!
நடன இயக்குநரான பாபா பாஸ்கர், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடன இயக்குநர்களுள் ஒருவராவார். தனுஷின் மிக நெருங்கிய நண்பரான இவர், அவரது பெரும்பாலான திரைப்படங்களில் பாபா பாஸ்கர் நடன இயக்குநராகவோ, துணை இயக்குநராகவாே பணியாற்றியிருக்கிறார். இந்த நிலையில்தான், அவருக்கு ஜனநாயகன் திரைப்படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இது குறித்து ஒரு பேட்டியில் பேசி யிருக்கும் பாபா பாஸ்கர், தான் ஜன நாயகன் திரைப்படத்தில் இருப்பது உண்மைதான் என்றும், அது ஒரு முக்கிய கதாப்பாத்திரம் இல்லை என்றாலும், வலுவான கதாப்பாத்திரமாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
பாபா பாஸ்கர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஃபேமஸ் ஆக காரணம், குக் வித் கோமாளி ரியாலிட்டி நிகழ்ச்சிதான். இதில், ஜாலியாக வந்து பலரை மகிழ்வித்த அவர், சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இட்லி கடை’ திரைப்படத்திலும் உதவி இயக்குநராக இருப்பதாக கூறப்படுகிறது.
ஜன நாயகன் படத்தில் நடிப்பவர்கள்..
ஜன நாயகன் திரைப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இது, இவர்கள் இருவரும் 2ஆம் முறையாக இணையும் படமாகும். நரேன், பாபி டியோல், பிரியாமணி, மமிதா பைஜு உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் நடிக்கின்றனர். இப்படம், அடுத்த ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ஜன நாயகன் படத்தில் சர்ப்ரைஸ்! விஜய்யுடன் நடனமாடும் 3 பிரபலங்கள்-யார் யார் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ