வட இந்தியாவில் பழங்கால கோவில்கள், புராதன கட்டிடங்கள், வரலாற்று சின்னங்கள் மட்டும் கிடையாது ஏராளமான மலை வாசஸ்தலங்களும் உள்ளன. அவற்றில் மிக முக்கியமான மற்றும் மிக பிரபலமான 7 மலை பிரதேசங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். அடுத்த முறை வட இந்தியா டூர் பிளான் செய்தால் நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள் தொடர்பான உங்கள் லிஸ்டில் இந்த 7 இடங்களையும் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

சோனாமார்க்
சோனாமார்க், காஷ்மீரின் அழகான பனிச்சரிவுகளும் மலைகளும் சூழ்ந்துள்ள ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும். இது அமர்நாத் யாத்திரைக்குச் செல்லும் முக்கிய வழித்தடங்களில் ஒன்றாகும். ட்ரெக்கிங், ரிவர் ராஃப்டிங் மற்றும் ஹார்ஸ் ரைடிங் போன்றவை இங்குள்ள சிறப்புகளாகும்.
முசோரி
முசோரி இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில், இமயமலைகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய மலைநகரமாகும். டெஹ்ராடூனிலிருந்து 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இது,பசுமை நிரம்பிய மலைகள், நீர்வீழ்ச்சிகள், மலைப்பாதைகள் கொண்ட ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகத் திகழ்கிறது.

ஸ்பிதி பள்ளத்தாக்கு
இந்தியாவின் இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள, உயரமான மலைகளால் சூழப்பட்ட ஒரு கண்கவர் பள்ளத்தாக்காகும். உயர்ந்த பனிமலைகள் மற்றும் மலைச்சரிவுகளால் சூழப்பட்ட பிரம்மாண்டமான இயற்கைக் காட்சிகள் கொண்ட அழகிய இடமாகும்.ஸ்பிதி பள்ளத்தாக்கு வானில் தோன்றும் நட்சத்திரங்களை பார்ப்பதற்கு ஓர் சிறந்த இடமாகும்.
பஞ்ச்மர்ஹி
இது சத்புரா மலைத் தொடரின் மத்தியில் அமைந்துள்ளது. இயற்கையின் எழிலுடன், நீர்வீழ்ச்சிகள், பாறை ஓவியங்கள் மற்றும் பழமையான குகை கோயில்கள் ஆகியவற்றை கொண்டிருக்கும் ஒரு தனித்துவமான இடமாகும். மலைகளாலும் அடர்ந்த காடுகளாலும் சூழப்பட்ட இயற்கை அழகுடன் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அழகிய மலைநகரம் ஆகும்.
யும்தாங் பள்ளத்தாக்கு
சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு அற்புதமான இயற்கைச் சொர்க்கம் ஆகும்.இங்கு வெவ்வேறு வண்ண மயமான மலர்கள் மிகுந்து காணப்படுகின்றன. இது "விலாஸ் பூங்கா" என்றும் அழைக்கப்படுகிறது. குளுமை அனுபவிப்பதற்கு மட்டுமின்றி, இயற்கையை கண்டு ரசிக்கவும் செல்ல வேண்டிய ஒரு அற்புமான இடமாகும்.
மவுண்ட் அபு
மவுண்ட் ஆபு என்பது ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரே மலைநகரமாகும். இது ஆரவல்லி மலைத்தொடரில் அமைந்துள்ள வெப்பமான ராஜஸ்தானில் ஒரு குளிர்ந்த மற்றும் அழகிய இடமாக திகழ்கிறது.புகழ்பெற்ற தில்வாரா கோயில்கள் மற்றும் நக்கி ஏரி போன்ற முக்கியமான சுற்றுலா இடங்களைக் கொண்டுள்ளது.

டல்ஹவுஸி
டல்ஹவுஸி, இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய மலைநகரமாகும். பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த நகரம், அதன் பழமை வாய்ந்த கட்டிடக் கலை, பசுமை நிறைந்த பள்ளத்தாக்குகள், மற்றும் பனிமலையின் மடியில் அமைந்த இயற்கை அழகுகளுக்காக பிரபலமானது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் இதுவும் ஒன்றாகும்.
இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet