ARTICLE AD BOX

கேரளதிரை உலகின் முன்னணி நட்சத்திரம்தான் மம்முட்டி. இவர் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் தான் டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தை அடுத்து புதிய பதமான பசூஹா படம் ஏப்ரல் பத்தாம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் கௌதம் மேனன் மம்முட்டியுடன் இணைந்து நடித்துள்ளார். ஒரு வருடத்திற்கு ஐந்து படம் நடித்து வரும் மம்முட்டி திடீரென்று படப்பிடிப்பில் இருந்து விலகியதாகவும் தகவல் வெளியானது.
மேலும் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்த நிலையில் இந்த தகவல்களுக்கும் மம்முட்டி மறுப்பு தெரிவித்தார். அதாவது மம்முட்டியின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள பதிவில்,இது பொய்யான செய்தி. அவர் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நோன்பு இருப்பதால் விடுப்பு எடுத்து இருந்தார். அதனால் தான் படப்பிடிப்புகளில் இருந்து இடைவெளி எடுத்துள்ளார். இந்த இடைவெளிக்கு பிறகு படத்தில் பங்கேற்க உள்ளார் என்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.