விசில் போடு! சென்னை – மும்பை போட்டியை பார்க்க ரெடியா? டிக்கெட் விற்பனை அப்டேட் இதோ!

4 hours ago
ARTICLE AD BOX
MI vs CSK

சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை பார்க்க உற்சாகத்துடன் தயாராகிவிட்டார்கள். முதல் போட்டியில் கொல்கத்தா அணியும் பெங்களூர் அணியும் மோதுகிறது. ஆனால், அந்த போட்டியை விட ரசிகர்கள் எதிர்பார்க்கும் போட்டி என்றால் அதற்கு அடுத்த நாள் அதாவது மார்ச் 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள சென்னை -மும்பை போட்டியை பார்க்க தான் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

அந்த போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவுகள் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் பலரும் காத்திருந்த நிலையில், அதற்கான தகவல் கிடைத்திருக்கிறது. அதன்படி, இந்த போட்டிக்கான டிக்கெட் பதிவு வரும் மார்ச் 19-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. இந்த போட்டியை காண விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.chennaisuperkings.com/ இணையதளத்திற்கு சென்று மார்ச் 19-ஆம் தேதி காலை 10.15 முதல் விண்ணப்பம் செய்து கொள்ளலாம்.

டிக்கெட் விலை 

ரூ.1,700 – C/D/E டவர், லோயர் ஸ்டாண்ட்
ரூ.2,500 – I/J/K டவர், அபர் ஸ்டாண்ட்
ரூ.3,500 – C/D/E டவர், அபர் ஸ்டாண்ட்
ரூ.4,000 – I/J/K டவர், லோயர் ஸ்டாண்ட்
ரூ.7,500 – KMK டவர், டெர்ரஸ் (Terrace Stand)

Read Entire Article