ARTICLE AD BOX
வாழப்பாடி: வாழப்பாடி அருகே சாலை விபத்தில் குழந்தைகள் கண் முன் தந்தை பலியானார்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி, சோமம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (33). கட்டுமான தொழிலாளியான இவருக்கு வசந்தா என்கிற மனைவியும், ரித்திகா (11) என்ற மகளும், கவின் (9) என்ற மகனும் உள்ளனர்.
இவர் வியாழக்கிழமை இரவு வாழப்பாடியில் இருந்து தனது இரு சக்கர வாகனத்தில் இரண்டு குழந்தைகளுடன் சோமம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
சோமம்பட்டி பெரியாண்டிச்சி அம்மன் கோவில் ஆட்கொல்லி வளைவு அருகே வந்த போது எதிரே திம்மநாயக்கன்பட்டி பகுதியில் இருந்து வந்த ஒரு வேன் மோதியது. இதில் எதிர்பாராதமாக மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டனர். விபத்தில் பலத்த காயம் அடைந்த பிரகாஷ்
வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது: நடிகர் பிரகாஷ் ராஜ்
காயம் அடைந்த ரித்திகா, கவின் இரண்டு பேரும் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து வாழப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது குழந்தைகள் கண் முன்
தந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.