ARTICLE AD BOX

கோயம்புத்தூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பூண்டி வெள்ளையங்கிரி ஆண்டவர் திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் தென் கைலாயம் என்று அழைக்கப்படும் நிலையில் இங்குள்ள 7-வது மலையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்புலிங்கமாக காட்சியளிக்கிறார். இந்த மலைக்கு செல்வதற்கு வருடம் தோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் வெள்ளியங்கிரி கோவிலின் 7-வது மலையில் ஒரு கம்பியில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில் பின்னரும் மலைப்பகுதிக்கு சென்று அங்கிருந்த கொடியை அகற்றினர். பக்தர்கள் என்ற பெயரில் கோவிலுக்கு சென்ற தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் கொடியை ஏற்றி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது சட்டப்படி பாதுகாக்கப்பட்ட மலை என்பதால் இப்படி கட்சி கொடியை அங்கு ஏற்றுவது மிகவும் தவறு. மேலும் இதன் காரணமாக சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து மலையில் கொடியை ஏற்றியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.