ARTICLE AD BOX
Gossip: பெரிய இயக்குனரின் மகன் என்ற அடையாளத்தோடு தான் அந்த நடிகர் ஹீரோவானார். ஆரம்பத்தில் ஏகப்பட்ட உருவ கேலிகளை அவர் சந்தித்திருக்கிறார்.
அதையெல்லாம் தாண்டி தன்னுடைய திறமை மூலம் அவர் இன்று முன்னணி அந்தஸ்தில் இருக்கிறார். நடிப்பு மட்டுமல்லாமல் பல திறமைகள் அவரிடம் இருக்கிறது.
அதே அளவுக்கு சர்ச்சைகளுக்கும் சொந்தக்காரர் தான் அந்த நடிகர். தனிப்பட்ட வாழ்க்கையில் இவர் பல விமர்சனங்களை கடந்து வந்திருக்கிறார்.
வாரிசு மேல் கடுப்பில் இருக்கும் இயக்குனர்
இதையெல்லாம் அவருடைய குடும்பம் கண்டும் காணாமல் இருந்தது. ஆனால் இப்போது நடிகரின் அப்பாவான அந்த இயக்குனர் அவர் மீது வருத்தத்தில் இருக்கிறாராம்.
அதாவது நடிகர் சமீபத்தில் தன் ரத்த உறவை வைத்து ஒரு படம் எடுத்திருந்தார். அது எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. இதுதான் தந்தையின் கோபத்திற்கு காரணம்.
படிக்கிற புள்ளைய நடிக்க வைக்கிறேனு கூட்டிட்டு போய் இப்படி செய்யலாமா படமும் ஓடல படிப்பும் கெட்டுப் போச்சு என மகன் மேல் இப்போது அவர் கோபத்தில் இருக்கிறாராம்.