நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஓடிடி ரிலீஸ்! எந்த தளத்தில், எப்போது பார்க்கலாம்?

3 hours ago
ARTICLE AD BOX

NEEK Movie OTT Release Date : நடிகராக மட்டும் இருந்த தனுஷ், இயக்குநராக மாறி, சில ஆண்டுகள் கடந்து விட்டது. இவர் முதன் முதலில் இயக்கிய ப.பாண்டி திரைப்படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, அவர் அடுத்ததாக இயக்கி நடித்தராயன் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த நிலையில், அவர் மூன்றாவது இயக்கிய படம், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். முழுக்க முழுக்க இளசுகளை வைத்து எடுத்திருந்த இந்த படம், திரையரங்குகளில் கடந்த பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி வெளியானது. 

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்: 

இதனை பலர் சுருக்கமாக NEEK என்று குறிப்பிட்டு வந்தனர். ‘சிம்பிளான லவ் ஸ்டோரி’ என்றுதான், இந்த படத்திற்கு விளம்பரமே செய்யப்பட்டது. தனுஷ் இந்த படத்தின் டிரைலரில் ‘ரொம்ப எதிர்பார்த்து வராதீங்க, இது ஒரு யூஸுவல்  லவ் ஸ்டோரிதான்’ என்ற கூறினார். சொன்னது போலவே, படமும் ஒரு நார்மலான லவ் ஸ்டோரியாகத்தான் இருந்தது. 

காதல் தோல்விக்கும்-காதலுக்கும் இருக்கும் மெல்லிய கோட்டில் சிக்கிக்கொண்ட இளைஞன். Ex காதலியை கரம் பிடித்தானா? அல்லது அந்த காதலில் இருந்து மீண்டானா? என்பதுதான் இப்படத்தின் கதை. இதனை இன்றைய இளசுகள் ரசிக்கும் வகையில் ஜாலியாக சொல்ல முயற்சி செய்திருந்தார் தனுஷ்.

ஓடிடி ரிலீஸ் : NEEK OTT Release

சமீப காலங்களாக, எந்த படம் திரைக்கு வந்தாலும் சில நாட்களிலேயே அது ஓடிடியில் வெளியாவதும் வழக்கமாகி வருகிறது. இந்த படம் நன்றாக ஓடினாலும் ஓடவில்லை என்றால் இதுதான் நிலை. இதையடுத்து தற்போது நிலத்துக்கு என் மேல் என்னடி கோபம் படமும் ஒரு பிரபல ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

#NEEKonPrime from March 21st onwards… pic.twitter.com/djVf6SfGTE

— Dhanush (@dhanushkraja) March 18, 2025

அமேசான் பிரைம் தளத்தில் வரும் மார்ச் 21ஆம் தேதி முதல் இந்த படத்தை பார்க்கலாம்.

தனுஷின் உறவினர்தான் ஹீரோ..

நடிகர் தனுஷ் தனுசு தந்தை கஸ்தூரி ராஜா மூலமாக திரையுலத்திற்கு வந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது அது கூடவே அவரது அக்காவின் மகன் பவிஷ்-ம் தனுஷ் மூலமாக ஹீரோவாகி இருக்கிறார். இவர் ஏற்கனவே தனுஷின் வாத்தி திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்திலும் இவர்தான் ஹீரோ. இவருக்கு ஜோடியாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா மற்றும் பிரியா பிரகாஷ் வாரியர் ஆகியோர் நடித்திருக்கின்றனர். அது மட்டுமின்றி, மலையாள நடிகர் மாத்யூ தாமஸ் பவிஷிற்கு நண்பனாக இப்படத்தில் நடித்திருக்கிறார்.

ஓடிடியில் வரவேற்பு கிடைக்குமா?

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படமும், டிராகன் படமும் ஒரே தேதியில் வெளியானது. டிராகன் படத்திற்கான வரவேற்பு பெரிதாக இருந்ததாலும், NEEK படத்திற்கு வந்த விமர்சனங்கள் காெஞ்சம் மோசமாக இருந்ததாலும் இப்படம், தியேட்டரில் அடிவாங்கியது. ஒரு சில படங்கள் திரையரங்குகளில் சரியாக ஓடவில்லை என்றாலும் கூட, ஓடிடியில் வெளியான பிறகு நல்ல வரவேற்பை பெறும். அந்த வகையில், இப்படம் ஓடிடி ரசிகர்களை ஈர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் படிக்க | குடும்பஸ்தன் படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தேதியில், எந்த தளத்தில் பார்க்கலாம்?

மேலும் படிக்க | ஆவலுடன் எதிர்பார்த்த டிராகன் படத்தின் ஓடிடி அப்டேட்! எப்போது எந்த தளத்தில் ரிலீஸ் ஆகும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read Entire Article